Kollywood Updates: நயன்தாரா படம், கோட் பாடல், லோகேஷ் - ராகவா லாரன்ஸ் படம்.. புத்தாண்டில் அப்டேட்ஸ் குவித்த கோலிவுட்!
Kollywood Latest Updates: நயன்தாரா முதல் ராகவா லாரன்ஸ் வரை முன்னணி நடிகர்களின் படங்களின் அப்டேட்கள் வெளியாகியுள்ளன
Tamil Cinema Latest Updates: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள அப்டேட்களை வரிசையாக பார்க்கலாம்
புத்தாண்டு ஸ்பெஷல் அப்டேட்ஸ்
இன்று ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல முக்கியமான அப்டேட்கள் வெளியிடப் பட்டுள்ளன. விஜய் நடித்துள்ள தி கோட் படம் முதல் லோகேஷ் கடனராஜ் கதையில் ராகவா லாரன்ஸ் என ரசிகர்களுக்கு அடுத்தடுத்த ட்ரீட் கொடுத்துள்ளார்கள். அவற்றை வரிசையாக பார்க்கலாம்
தி கோட் முதல் பாடல்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! Namma #Thalapathy ku #WhistlePodu #GoatFirstSingle @actorvijay @thisisysr @madhankarky pic.twitter.com/aiAnfHHsQR
— venkat prabhu (@vp_offl) April 14, 2024
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாக இருக்கிறது. முன்னதாக இந்தப் பாடலின் ப்ரோமோ வெளியாகி இருந்தது. ’விசில் போடு’ என்கிற இந்தப் பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். மதர் கார்க்கி பாடல்வரிகளை எழுதி யுவன் ஷங்கர் ராஜா இசையைமைத்துள்ளார்.
பென்ஸ்
It is my wish to bring #Benz to the screen and this is catching its own wish at 11:11 🤞🏻
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 14, 2024
I am very happy to be associating with our beloved @offl_Lawrence sir, thank you so much for trusting our team. And Director @bakkiyaraj_k , I am excited for you.
Thank you everyone for… pic.twitter.com/MOVB12Puh4
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் இணைந்து தயாரிக்கும் படம் பென்ஸ். லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்திற்கான கதையை எழுத, ராகவா லாரன்ஸ் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். ரெமோ , சுல்தான் ஆகிய படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார்.
சுள்ளான் சேது
குட்டிப் புலி, மருது , கொம்பன் , விருமன் உள்ளிட்டப் படங்களை இயக்கிய முத்தையாவின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. ’சுள்ளான் சேது’ என்று டைட்டில் வைக்கப் பட்டுள்ள இந்தப் படத்தில் இயக்குநர் முத்தையாவின் மகன் விஜய் முத்தையா நாயகனா அறிமுகமாக இருக்கிறார்.
அண்டாவ காணோம்
ஜே.எஸ் .கே ஃபிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் வேல்மதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘அண்டாவ காணோம்’ . திமிரு படத்தின் வில்லியாக நடித்து கவனமீர்த்த ஷ்ரியா ரெட்டி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
டியர் ஸ்டுடண்ட்ஸ்
Into the fun and gripping world of “Dear Students” joins, the incredible, ever radiant Nayanthara 💖💖https://t.co/A9iLfTbZKy#Nayanthara@GeorgePhilipRoy @Sandeepkumark1p @PaulyPictures#karmamediaent#shaaileshrsingh#ultrabollywood #nitink283#nayanthara #dearstudents pic.twitter.com/OjxAxogij6
— Nivin Pauly (@NivinOfficial) April 14, 2024
ஜார்ஜ் ஃபிலிம் ராய் மற்றும் சந்தீப் குமார் இணைந்து இயக்கும் படம் ’டியர் ஸ்டுடண்ட்ஸ்’ . நிவின் பாலி மற்றும் நயன்தாரா இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.