மேலும் அறிய

Movie Ticket Price Hike: சினிமா டிக்கெட் விலையை உயர்த்த அனுமதி தாங்க - தமிழ்நாடு அரசுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை

திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு திரைப்பட உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக திரையரங்கம் உள்ளது. இந்த நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. இதில், தியேட்டர் கட்டணங்களை உயர்த்த அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

புதிய கட்டண கோரிக்கை:

இதன்படி, மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளில் ஏ.சி. தியேட்டரில் ரூபாய் 250 ஆகவும், ஏ.சி. அல்லாத தியேட்டரில் ரூபாய் 150 ஆகவும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து ஆகிய பகுதிகளில் உள்ள ஏ.சி. தியேட்டர்களுக்கு ரூபாய் 200 ஆகவும்,  ஏ.சி. அல்லாத தியேட்டர்களுக்கு ரூபாய் 120 ஆகவும், ஐமேக்ஸ் 450 ஆகவும், எபிக்யூ தியேட்டர்களில் 400 ரூபாயாகவும், ரீக்ளீனர் இருக்கை திரையரங்கில் ரூபாய் 350 ஆகவும் உயர்த்தவும் அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்களின் இந்த கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றுமா? அல்லது ரத்து செய்யுமா? என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையோட இணைந்த விஷயங்களில் ஒன்றாக சினிமாவும் உள்ளது. இதன் காரணமாக, ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா போன்ற பிரபலங்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் நாட்கள் திருவிழாக்களை போல கொண்டாடப்படுவது வழக்கம்.

குடும்பங்களாக செல்ல முடியுமா?

பெரிய படங்கள், சிறிய பட்ஜெட் படங்களை மக்கள் தியேட்டர்களுக்கு சென்று பார்ப்பது வழக்கமாக உள்ளது. கொரோனாவிற்கு பிந்தைய காலத்திலும் தியேட்டர்களில் வழக்கம்போல ரசிகர்கள் பட்டாளம் படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், ஒவ்வொரு தியேட்டர்களிலும் அங்குள்ள வசதிகளுக்கு ஏற்றாற்போல டிக்கெட் விலை விற்பனை செய்யப்படுகிறது.

தனிநபராக சென்று படம் பார்க்க டிக்கெட் விலை கட்டுப்படியானதாக இருந்தாலும், குடும்பத்துடன் சென்று படம்பார்க்க செல்பவர்களுக்கு சுமார் 1000-த்திற்கும் மேல் இயல்பாகவே செலவாகிறது. இந்த நிலையில், திரைப்பட கட்டணங்களை உயர்த்த திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசின் முடிவு என்ன?

தற்போதே நேரில் சென்று டிக்கெட் எடுக்கும்போது இருப்பதை காட்டிலும் இணையத்தில் பதிவு செய்து டிக்கெட் எடுக்கும்போது ரசிகர்களுக்கு இணைய கட்டணம் உள்பட பல்வேறு கட்டணங்களால் கூடுதல் செலவாகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலும் அனைத்து திரையரங்குகளும் ஏ.சி. திரையரங்குகளாக செயல்படுகிறது. இந்த நிலையில், மல்டிப்ளெக்சில் உள்ள ஏ.சி. திரையரங்குகளுக்கு ரூபாய் 250 ஆக டிக்கெட் விலையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பது சாமானிய ரசிகர்களை மிக கடுமையாக பாதிக்க அதிகளவில் வாய்ப்புகள் உள்ளது.

தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் சங்கத்தின் இந்த கோரிக்கைக்கு, தமிழக அரசின் தரப்பில் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள்? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.  

மேலும் படிக்க: 20 Years Of Kadhal Konden: காதல் கொண்டேன் ரிலீஸாகி 20 வருஷம் ஆகிடுச்சா? தனுஷ் என்ன சொன்னாரு?

மேலும் படிக்க: Kathar Basha OTT Release: ஓடிடியில் வெளியாகும் காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் ... உற்சாகத்தில் முத்தையா ரசிகர்கள்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
Embed widget