மேலும் அறிய
Advertisement
Tamil Nadu Government Film Awards: 2015ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு - சிறந்த நடிகையாக ஜோதிகா தேர்வு...!
2015ம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களாக தனி ஒருவன், பசங்க 2, பிரபா, இறுதிச்சுற்று, 36 வயதினிலே தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்குகிறார். இதையடுத்து, 2015ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களாக தனி ஒருவன், பசங்க 2, பிரபா, இறுதிச்சுற்று, 36 வயதினிலே தேர்வு செய்யப்பட்டுள்ளது.
-
- சிறந்த படம் முதல் பரிசு - தனி ஒருவன்
- சிறந்த படம் இரண்டாம் பரிசு - பசங்க 2
- சிறந்த படம் மூன்றாம் பரிசு - பிரபா
- சிறந்த படம் சிறப்புப் பரிசு - இறுதிச்சுற்று
- பெண்களை பற்றி உயர்வாக சித்திரிக்கும் படம் (சிறப்புப் பரிசு) - 36 வயதினிலே)
தேர்வு செய்யப்பட்ட சிறந்த நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்:
- சிறந்த நடிகை சிறப்பு பரிசு - ரித்திகா சிங் (இறுதிச்சுற்று)
- சிறந்த வில்லன் நடிகர் - அரவிந்த்சாமி (தனி ஒருவன்)
- சிறந்த நடிகர் - மாதவன் (இறுதிச்சுற்று)
- சிறந்த நடிகை - ஜோதிகா (36 வயதினிலே)
- சிறந்த நடிகர் சிறப்புப் பரிசு - கௌதம் கார்த்திக் (வை ராஜா வை)
- சிறந்த இயக்குநர் - சுதா கொங்கரா (இறுதிச்சுற்று)
- சிறந்த கதையாசிரியர் - மோகன் ராஜா (தனி ஒருவன்)
- சிறந்த இசையமைப்பாளர் - ஜிப்ரான் (உத்தம வில்லன்/ பாபநாசம்)
- சிறந்த ஒளிப்பதிவாளர் - ராம்ஜி (தனி ஒருவன்)
- சிறந்த நகைச்சுவை நடிகர் - சிங்கம்புலி (அஞ்சுக்கு ஒண்ணு)
- சிறந்த நகைச்சுவை நடிகை - தேவதர்ஷினி (திருட்டுக் கல்யாணம்/ 36 வயதினிலே)
- சிறந்த குணச்சித்திர நடிகர் - தலைவாசல் விஜய் (அபூர்வ மகான்)
- சிறந்த குணச்சித்திர நடிகை - கவுதமி (பாபநாசம்)
- சிறந்த உரையாடலாசிரியர் - இரா. சரவணன் (கத்துக்குட்டி)
- சிறந்த பாடலாசிரியர் - விவேக் (36 வயதினிலே)
- சிறந்த பின்னணிப் பாடகர் - கானா பாலா (வை ராஜா வை)
- சிறந்த பின்னணிப் பாடகி -கல்பனா ராகவேந்தர் (36 வயதினிலே)
- சிறந்த ஒலிப்பதிவாளர் - 1. ஏ.எல். துக்காரம் 2. ஜெ.மஹேச்வரம் (தாக்க தாக்க)
- சிறந்த திரைப்பட தொகுப்பாளர் - கோபி கிருஷ்ணன் (தனி ஒருவன்)
- சிறந்த கலை இயக்குநர் - பிரபாகரன்(பசங்க 2)
- சிறந்த சண்டை பயிற்சியாளர் - ரமேஷ் (உத்தம வில்லன்)
- சிறந்த நடன ஆசிரியர் - பிருந்தா (தனி ஒருவன்)
- சிறந்த ஒப்பனை கலைஞர் - சபரி கிரீஷன் (36 வயதினிலே/ இறுதிச்சுற்று)
- சிறந்த தையற் கலைஞர் - வாசுகி பாஸ்கர் (மாயா)
- சிறந்த குழந்தை நட்சத்திரம் - 1. மாஸ்டர் நிஷேஸ் 2. பேபி வைஷ்ணவி (பசங்க 2)
- சிறந்த பின்னணிக்குரல் (ஆண்) - கௌதம் குமார் (36 வயதினிலே)
- சிறந்த பின்னணிக்குரல் (பெண்) - ஆர். உமா மகேஸ்வரி (இறுதிச்சுற்று)
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்வி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் 2014 - 2015 :
- சிறந்த இயக்குநர் - கே.மோகன் குமார் (புர்ரா)
- சிறந்த ஒளிப்பதிவாளர் - விக்னேஷ் ராஜகோபாலன் (கண்ணா மூச்சாலே)
- சிறந்த ஒலிப்பதிவாளர் - வி.சதிஸ் (கண்ணா மூச்சாலே)
- சிறந்த படத்தொகுப்பாளர் - ஏ.முரளி (பறை)
- சிறந்த படம் பதனிடுவர் - வி.சந்தோஷ்குமார் (கிளிக்)
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion