‛என் இனிய பாரதிராஜா சார்...’ இல்லம் சென்று உடல் நலம் விசாரித்த தமிழக முதல்வர்!
இயக்குநர் பாரதிராஜா உடல் நலம் குறித்து விசாரித்தார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்
மூன்று வார சிசிக்சைக்கு பின்னர், இயக்குநர் பாரதிராஜா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். நேற்று மதியத்திற்கு மேல், வீட்டுக்கு சென்ற பாரதிராஜா முழு நேர ஒய்வு எடுத்து வருகிறார். தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின், நீலாங்கரையில் உள்ள இவர் இல்லத்திற்கு சென்று அவரின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.
View this post on Instagram
பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தி. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நீர்ச்சத்து சார்ந்த குறைபாடுகள் இருப்பதாக தகவல் வெளியானது. முன்னதாக இரண்டு நாட்கள் வீட்டில் இருந்து அவர் சிகிச்சைப் பெற்று வந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு நீர்ச்சத்து சார்ந்த குறைபாடுகள் இருப்பதாகவும், புதிய மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இது ஒருபுறம் இருக்க அவருக்கு பெரிதான பாதிப்பு ஏதும் இல்லை என்றும்அவர் இன்னும் நான்கு நாட்களில் வீடு திரும்பிவிடுவார் என்றும் தகவல் வெளியானது. ஆனால் அவ்ர் வீடு திரும்ப 3 வார காலங்கள் ஆனது.
திரைப்பட இயக்குநர் திரு. பாரதிராஜா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியதையொட்டி மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார். pic.twitter.com/zmxa1qzdwC
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 10, 2022
இப்போது முதல்வர் ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து, அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர், இயக்குநர் பாரதிராஜவை சந்தித்து அவரின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளனர். முதல்வர் ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான புகைப்படங்கள் வெளியானது. இதில், இயக்குநரின் மகன் மனோஜும் அருகில் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க : எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா முதலில் இணைந்த படம்... 57 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‛கன்னித்தாய்’
Boss Engira Bhaskaran: 12 ஆண்டுகளுக்கு முன் விழுந்து விழுந்து சிரிக்க வைத்த ‛பாஸ் என்கிற பாஸ்கரன்’