Sivakarthikeyan: 'சூப்பர் சிவகார்த்திகேயன்’ ... தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பாராட்டு.. என்ன நடந்தது?
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘மாவீரன்’. இந்த படத்தில் நடிகைகள் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குநர் மிஸ்கின், யோகிபாபு, மோனிஷா பிளஸ்சி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இயக்கியுள்ள இந்த படமானது வரும் ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முன்னதாக மாவீரன் படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் போன்றவை வெளியாகி பெரும் வரவேற்பையும், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. மேலும் மாவீரன் படத்தில் சில இடங்களில் நடிகர் விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே நேற்று மாவீரன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் பேசிய சிவகார்த்திகேயன், பணம் போடுவது மட்டும் தயாரிப்பாளர் வேலை என்று நினைக்காமல், சரியான முறையில் ஒரு படத்தை கொண்டு சேர்க்கும் அத்தனை வேலைகளையும் தயாரிப்பாளார் அருண் செய்வார் என கூறினார். மேலும் தயாரிப்பாளர்கள் பிரச்சினைகளில் தலையிடுவது குறித்தும் பேசினார். இது ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது.
இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி (எ) முரளி ராமநாராயணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “திரைப்படம் தயாரிக்கும் பொழுது தயாரிப்பார்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இன்றைய முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் மாவீரன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் படம் தயாரிப்பது தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் தலையிட்டு, தீர்க்க முயற்சிப்பது போன்ற விஷயங்களை தவிர்த்து நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தலாமே கேட்கிறார்கள்.
அதற்கு, “என்னை என்று பொறுத்தவரை ஒரு நடிகர் படத்தயாரிப்பு நிறுவனம் நடத்தாவிட்டாலும் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்துதான் ஆக வேண்டும். நமக்கு சம்பளம் வந்தால் போதும், தயாரிப்பாளருக்கு பிரச்சனை வந்தால் நமக்கென்ன என்று ஒதுங்கி இருக்க முடியாது. அது நான் நடித்த படம் அதன் லாப நஷ்டங்களில் எனக்கு பங்கு இருக்கிறது. அந்த படத்திற்கு வரும் பிரச்சனைகளை முடிந்தவரை தீர்த்துவைப்பது எனது கடமை என்று நினைக்கிறேன்” என்று தயாரிப்பாளர்கள் படும் இன்னல்களை மனதில் வைத்து பேசியுள்ளதற்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பார்கள் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.