மேலும் அறிய

சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!

டாடா சியரா எஸ்யூவி காரின் வண்ணங்களில் இருந்து ஈர்க்கப்பட்டு, Munnar Mist மற்றும் Coorg Cloud ஆகிய இரு தனித்துவமான புதிய வெளிப்புற நிறங்களை டாடா மோட்டார்ஸ் இதில் சேர்த்துள்ளது.

இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பல்வேறு வகையான வாகனங்கள் மூலமாக, மாருதி சுசுகி மற்றும் மஹிந்திரா போன்ற ஆட்டோமொபைல் துறையின் முன்னணி நிறுவனங்களுக்கு தற்போது கடும் போட்டியளித்து வருகிறது.

சந்தையில் டாடா நிறுவன வாகனங்கள் மீதான மோகம் வாடிக்கையாளர்களிடையே மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், தங்களது மிகவும் வெற்றிகரமான சப்-காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் புதிய டாடா நெக்ஸான் காரின் காமோ எடிஷனை (Camo Edition) ஸ்போர்ட்டியான தோற்றத்தில் அறிமுகப்படுத்தும் முக்கிய முடிவை நிறுவனம் எடுத்துள்ளது.

விலை என்ன?

பணத்திற்கு மிகவும் மதிப்புமிக்கதாக விளங்கும் இந்த லிமிடெட் எடிஷன் மாடலின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.99 லட்சமாகவும், டாப்-எண்ட் வேரியண்டின் விலை ரூ.13.94 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சியரா காப்பியா?

டாடா சியரா எஸ்யூவி காரின் வண்ணங்களில் இருந்து ஈர்க்கப்பட்டு, Munnar Mist மற்றும் Coorg Cloud ஆகிய இரு தனித்துவமான புதிய வெளிப்புற நிறங்களை டாடா மோட்டார்ஸ் இதில் சேர்த்துள்ளது.

மூணார் மிஸ்ட் என்பது ஒளியைப் பொறுத்து நிறம் மாறி முரட்டுத்தனமான தோற்றத்தைத் தரும் அடர் பச்சை நிறமாகும். கூர்க் கிளவுட் மெட்டாலிக் கிரே-சில்வர் ஃபினிஷிங்குடன் வருகிறது. மேலும், முன்பக்க ஃபெண்டர்களில் பிரத்யேக காமோ பேட்ஜிங் மற்றும் முன்பக்க இருக்கைகளின் ஹெட்ரெஸ்ட்களில் காமோ தீம் வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

உட்புற கேபினில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றமாக, டேஷ்போர்டு டிசைனோடு கச்சிதமாகப் பொருந்தும் வகையிலான ஷார்ப்பான 12.3 இன்ச் ஹர்மன் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, விபத்துகளைத் தானாகவே பதிவு செய்து சேமிக்கும் டேஷ்கேமுடன் கூடிய 360 டிகிரி கேமராவும் உள்ளது.

வாய்ஸ் அசிஸ்ட் வசதி கொண்ட பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன்பக்க இருக்கைகள், 9-ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், பிளைண்ட் வியூ மானிட்டர், லெவல்-1 ADAS தொழில்நுட்பம் மற்றும் நேவிகேஷனுடன் கூடிய 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே போன்ற நவீன ஹைடெக் அம்சங்கள் இதில் நிறைந்துள்ளன.

3 எரிபொருள் தேர்வு

நெக்ஸான் காமோ எடிஷனில் என்ஜின் அளவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல், டீசல், மற்றும் சிஎன்ஜி என மூன்று எரிபொருள் தேர்வுகளிலும் இது கிடைக்கிறது. 120 PS பவரை வெளிப்படுத்தும் 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல், 115 PS பவர் தரும் 1.5-லிட்டர் டர்போ டீசல் மற்றும் 100 PS பவர் அளிக்கும் 1.2-லிட்டர் டர்போ iCNG என்ஜின்கள் உள்ளன. கியர்பாக்ஸ் ஆப்ஷன்களைப் பொறுத்தவரை, இதில் 6-ஸ்பீடு மேனுவல், AMT மற்றும் 7-ஸ்பீடு DCA டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கள் அடங்கும்.

தற்போது நீங்கள் 10 லட்சம் முதல் 14 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் மிகப்பெரிய திரை, இன்பில்ட் டேஷ்கேம் மற்றும் நவீன பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான, கரடுமுரடான காம்பாக்ட் எஸ்யூவி காரைத் தேடுகிறீர்கள் என்றால், இந்த புதிய டாடா நெக்ஸான் காமோ எடிஷன் நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற மிகச்சிறந்த தேர்வாக அமையும்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.80,000 விலை குறைப்பு! ஸ்போர்ட்ஸ் பைக் பிரியர்களின் கனவு பைக் இனி மலிவு விலையில்
ரூ.80,000 விலை குறைப்பு! ஸ்போர்ட்ஸ் பைக் பிரியர்களின் கனவு பைக் இனி மலிவு விலையில்
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
Tata EV Discount: கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
MG Hector Storm: பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget