மேலும் அறிய

”நான் அமெரிக்காவில் இருக்கேனா?” - பட வாய்ப்புகள் போக காரணம் இதுதான்.. வருந்திய ஜனகராஜ்

தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், ரஜினி வந்து பார்த்ததாகவும் சிலர் வேண்டுமென தவறான தகவல்களை எழுதி மனதை காயப்படுத்துவதாகவும் ஜனகராஜ் குறிப்பிட்டுள்ளார்

நான் அமெரிக்காவுக்கே போனதில்லை, ஆனால் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டதாக வதந்தி பரவுவதாக நடிகர் ஜனகராஜ் வேதனை தெரிவித்துள்ளார் 

1978ம் ஆண்டு ராதிகா, சுதாகர் நடித்த கிழேக்கே போகும் ரயில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜனகராஜ், கடைசியாக த்ரிஷா விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 படத்தில் பள்ளி வாட்ச்மேனாக நடித்திருப்பார். எப்பொழுதுமே பிரபலமான திரைப்பட நடிகர்கள் படங்களில் இருந்து நடிக்காமல் ஒதுங்கி இருந்தால் வதந்திகள் பரவுவது வழக்கமாகி விட்டது. அந்த வகையில் நடிகர் ஜனகராஜ் பற்றியும் வதந்திகள் பரவின. அவர் அமெரிக்கா சென்று செட்டிலானதால் தமிழ் திரைபப்டங்களில் நடிப்பதில்லை என கூறப்பட்டது. 

பாரதிராஜாவின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜனகராஜ், ரஜினி, கமல்ஹாசன் என இரு லெஜெண்டுகளுடன் நடித்து அவர்களுக்கு நண்பரானவர். காமெடியில் எந்த கேரக்டர்களிலும் கலக்கும் இவர் கமலின் நாயகன், விக்ரம், அபூர்வ சகோதரர்கள், குணா படங்களிலும், ரஜினியின் ராஜாதி ராஜா, பணக்காரன், அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இந்த படங்களில் ஜனகராஜின் காமெடி ரொம்பவே பிரபலமானது. 


”நான் அமெரிக்காவில் இருக்கேனா?” - பட வாய்ப்புகள் போக காரணம் இதுதான்.. வருந்திய ஜனகராஜ்

இந்த நிலையில் அண்மையில் ஜனகராஜ் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில்,  தனது குடும்பம் பற்றியும், சினிமா பற்றியும் ஜனகராஜ் ஓப்பனாக பேசியுள்ளார். தான் அமெரிக்காவில் செட்டில் ஆகவில்லை என்றும், இதுவரை ஒருமுறை கூட அமெரிக்காவிற்கு சென்றதில்லை என்றும் கூறியுள்ளார். தான் அமெரிக்காவில் செட்டில் ஆனதாக வெளியாகும் செய்திகளால் தனக்கு பட வாய்ப்புகள் கூட வருவதில்லை என்று வருத்தப்பட்டார். தனது குடும்பத்துடன் சென்னையில் தான் வசித்து வருவதாக கூறிய ஜனகராஜ் நல்ல வாய்ப்புகள் கிடைக்காததால் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றார். தனக்கு நல்ல கேரக்டர் கொடுத்தால் கட்டாயம் நடிப்பேன் என்ற ஜனகராஜ், தன்னை பற்றிய வதந்திகள் வருத்தம் அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுமட்டும் இல்லாமல் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், ரஜினி வந்து பார்த்ததாகவும் சிலர் வேண்டுமென தவறான தகவல்களை எழுதி மனதை காயப்படுத்துவதாகவும் ஜனகராஜ் குறிப்பிட்டுள்ளார். இப்படிப்பட்ட தவறான செய்தியால் தன்னை பலர் தொலைபேசியில் அழைத்து நலம் விசாரிப்பதாகவும், உடம்புக்கு என்ன ஆச்சு என கேட்பதாகவும் கூறியுள்ள ஜனகராஜ், எத்தனை பேருக்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பது என்றார். மேலும் கொரோனா காலத்தில் அதிகமாக மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், பத்திரிகைகளில் தன்னை பற்றி வரும் தவறான செய்திகள் வேதனை அளிப்பதாகவும் ஜனகராஜ் குறிப்பிட்டுள்ளார்.

மனைவி தன்னை நன்றாக கவனித்து கொள்வதாகவும், தனக்கு ஒரே ஒரு மகன் என்றும், அவரும் ஜோஹோவில் வேலை பார்ப்பதாகவும் ஜனகராஜ் தெரிவித்துள்ளார். மேலும் நேரம் கிடைக்கும்போது சினிமா நண்பர்களிடம் தொலைபேசியில் பேசுவதாகவும் கூறியுள்ளார். 

மேலும் படிக்க: Actor Senthil family: மருத்துவராக, ஏழைகளுக்கு சேவை செய்யும் நடிகர் செந்தில் மகன்

TV September 30: ‘விடுமுறையை கொண்டாட இந்த படங்கள்’ .. டிவியில் இன்றைக்கு ஒளிபரப்பாகும் சூப்பரான படங்கள் இதோ..!

 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget