மேலும் அறிய
Advertisement
Mysskin Birthday: “தமிழ் சினிமாவின் சம்பவக்காரர்” - இயக்குனர் மிஷ்கினின் பிறந்த நாள் இன்று..!
சினிமாவின் டெவில் இயக்குராக மிரட்டி வரும் மிஷ்கினிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
Mysskin Birthday: சித்திரம் பேசுதடி தொடங்கி பிசாசு வரை மிரட்டிய இயக்குநர் மிஷ்கின் இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார்.
திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், நடிகர், பாடகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகங்களை கொண்டவர் தான் மிஷ்கின். இவர் 2006ம் ஆண்டு வெளிவந்த சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே மிஷ்கின் யார் என பேசவைத்தவர். அதில் இடம்பெற்ற வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் என்ற பாடல் டிரெண்டாகி ஒவ்வொரு ரசிகனையும் ரசிக்க வைத்தது.
அதேபோல் நட்பில் நல்லவன் கெட்டவன் ஆவதும், கெட்டவன் நல்லவன் ஆவதும் கெட்டவன் ஆவதுமாக காட்டி, ஹீரோ - வில்லன் கேரக்டர்களின் எதிர்மறை தாண்டிய சமூக யதார்த்தை ’அஞ்சாதே’ படத்தின் மூலம் வேறொரு கோணத்தில் காட்டி இருப்பார். மனநலம் பாதிக்கப்பட்டவருடன், சிறுவன் இருப்பதை கவிதையாக காட்டியிருக்கும் படம் ‘நந்தலாலா’. மிடில் கிளால் படங்களை எடுத்து சோகமான ரோலில் நடித்த சேரனை யுத்தம் செய் படத்தின் மூலம் வேறொரு பரிணாமத்திற்கு அழைத்து சென்றவர்.
ஓநாயும், ஆட்டுக்குட்டியும் படத்தின் மூலம் தன்னையே நடிகராக மாற்றியவர், விபத்தில் இறந்த பெண்ணிற்கு வரும் காதல், அதை சுற்றி நடக்கும் அமானுஷ்யம் பிசாசு படத்தின் மூலம் மிரட்ட வைத்தவர். கண்ணு தெரியாத நாகயன் சைக்கோ கில்லரை கண்டுபிடிக்கும் கதையை மிஷ்கினால் மட்டுமே அழகாக கூற முடிந்தது. இதுமட்டும் இல்லாமல், வித்யாசமான கதையமைப்பில் எடுக்கப்பட்ட முகமூடி, துப்பாளறிவாளன் படங்கள் மிஷ்கினின் தனி படைப்புகள்.
தன்னை கதை சொல்லி என கூறும் மிஷ்கின் தனது ஒவ்வொரு படைப்பின் மூலம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருபவர். அன்பு, சைக்கோ, கொலை, அமானுஷ்யம், விசாரணை என ஒவ்வொரு கதைகளிலும் தனி பாணியை கையாளரும் மந்திரத்தை மிஷ்கின் மட்டுமே தெரிந்து கொண்டவர். இயக்குநாக மட்டும் இல்லாமல், அண்மையில் வெளிவந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாவீரன், லியோ வரை சிறப்பான வில்லன் கேரக்டரின் நடித்து தனக்கென தனி முத்திரையை பதித்து வருகிறார்.
நடிகராக மட்டும் இல்லாமல் இசை மீதும் ஆர்வம் உள்ள மிஷ்கின் டெவில் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார். கிளாசிக் படங்களை பார்க்க விரும்பும் மிஷ்கின், கடைசி விவசாயி படத்தை பார்த்துவிட்டு கண்ணீருடன் பேசி இருந்தார். இப்படி சினிமாவின் டெவில் இயக்குராக மிரட்டி வரும் மிஷ்கினிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
மேலும் படிக்க: Today Movies in TV, November 20: உலகக்கோப்பை ஓவர்.. டிவியில் இன்னைக்கு போடுற படங்கள் என்னென்ன பாருங்க..!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விழுப்புரம்
தமிழ்நாடு
சேலம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion