Multistarrer in Cinema: ஒரு படத்தில் பத்து ஹீரோக்கள்.. திரைப்படங்களில் பன்மொழி நடிகர்கள் நடிப்பதில் சாதக பாதகங்கள் என்ன?
திரைப்படங்களில் பன்மொழி நட்சத்திரங்கள் நடிப்பதின் சாதகமும் பாதகமும் என்னவாக இருக்கலாம் என்பதை பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் வெகு நாட்களுக்குப் பிறகு மல்டிகாஸ்டிங் பற்றி மிக ஆர்வமாக பேசிய இயக்குநர் என்றால் லோகேஷ் கனகராஜை சொல்லலாம். இந்திய சினிமாவில் பல திறமையான நடிகர்கள் இருக்கிறார்கள்.அதே நேரத்தில் அவர்களை எல்லாம் இணைந்து திரையரங்குகளில் நடிக்க வைப்பதன் சவாலை விரும்பி ஏற்றுக்கொண்டவர் லோகேஷ். வெறும் படத்தின் மார்கெட்டை மையப்படுத்தி மட்டுமில்லாமல் கதை, கதாபாத்திரம் மற்றும் நடிகர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடியதாக இதை சாத்தியப்படுத்த நினைப்பவர் லோகேஷ்.
ஒரு தமிழ் படத்தில் ஹிந்தி,தெலுங்கு மலையாளம் என அத்தனை மொழி நட்சத்திரங்களும் ஏதோவொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இயக்குநர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு மற்ற மொழி நடிகர்களை தேர்வு செய்வதில் கவணம் செலுத்திவருகிறார்கள். மேலும் பான் இந்தியா என்கிற வார்த்தையின் புழக்கம் அதிகரித்திருக்கும் சூழலில் அத்தனை ரசிகர்களின் கவணத்தை ஈர்க்க இதை செய்வது கட்டாயமாகவும் இருக்கிறது.
இத்தனை நடிகர்கள் ஒரு படத்தில் பங்காற்றும் போது அவர்களுக்கு தகுந்த கதாபாத்திரங்கள் வழங்கப்படுகிறதா. அனைத்துக் கதாபாத்திரங்களுக்கு ம் போதிய அளவிலான காட்சிகள் இருக்கின்றனவா என்பதே மிகப்பெரிய கேள்வி. இதற்குமுன் வெளியானத் திரைப்படங்கள் அதனைச் செய்யத் தவறியிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். இந்த அண்டு வெளியாக இருக்கும் திரைப்படங்களின் படக்குழுவை பார்க்கலாம்.
இந்தியன் 2
ஷங்கர் இயக்கும் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இருக்கிறது. கமல்ஹாசன், ரகூல் ப்ரீத் சிங், பிரியா பவானை சங்கர், ஐஷ்வர்யா ராஜேஷ், குரு சோமசுந்தரம், எஸ். ஜே, சூர்யா, சித்தார்த் சமுத்திரகனி, பாபி சிம்ஹா மேலும் பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். இத்தனை நடிகர்கள் இருக்கும் படத்தில் அனைவரது நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டிருக்குமா என்பதுதான் கேள்வி.
ஜெய்லர்
இந்த ஆண்டு வெளியாக இருக்கும் மற்றுமொரு மிகப்பெரியப் படம் என்றால் நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜெய்லர் திரைப்படம். ரஜினிகாந்த், தமன்னா, பிரியங்கா மோஹன், ரம்யாகிருஷ்ணன், ஜாக்கி ஷ்ராஃப், யோகிபாபு , மோகன்லால் என ஹிந்தி மற்றும் மலையாள நடிகர்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
லீயோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லீயோ திரைப்படம் உலகம் முழுவது ஆயிரம் கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த இலக்கை எட்டுவதற்கான அத்தனை எதிர்பார்ப்பையும் உருவாக்கி வருகிறது படக்குழு, விஜய், சஞ்சய் டத், மிஸ்கின், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் , பிரியா ஆனந்த் என நீண்டுகொண்டு போகிறது படக்குழு.
மார்க் ஆண்டனி
விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படம் இந்த வரிசையில் இடம்பெறுகிறது. ஆதிக் ரவிசந்திரன் இயக்கும் இந்தப் படத்தில் செல்வராகவன், சிரஞ்சீவி ஆகியவர்கள் நடித்துள்ளார்கள்.
இந்தப் படங்கள் எல்லாம் மிகப்பெரிய நடிகர்கள் கூட்டணியைக் கொண்டிருக்கின்றன . அவர்களுக்கு நியாயம் சேர்க்கிறதா இல்லையா என்பதை படம் வெளியானப் பிறகே நாம் தெரிந்துகொள்ள முடியும்