'இதற்குத்தானே ஆசைப்பட்டாய்' பட பாடலை எழுதிய பாடலாசிரியர் மறைவு! ஷாக்கில் திரையுலகம்!
தமிழ் திரைப்பட பாடலாசிரியர் லலிதானந்த் இன்று மாரடைடைப்பு காரணமாக சென்னையில் உயிரிழந்தார்.
தமிழ் திரையுலகின் மிகவும் முக்கியமான பாடலாசிரியர் லலிதானந்த். இவர் இன்று மாரடைப்பு காரணமாக சென்னையில் உயிரிழந்தார். திருச்சியைப் பூர்வீகமாக கொண்ட லலிதானந்திற்கு கடந்த சில காலமாக சிறுநீரக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதற்காக, சிகிச்சை பெற்று வந்த அவருக்கு ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது அவருக்கு இரண்டாவது முறையாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான “அதே நேரம் அதே இடம்” படத்தின் மூலமாக பாடலாசிரியராக அறிமுகமானார். அந்த படத்தில் இடம்பெற்றுள்ள அது ஒரு காலம், அழகிய காலம் என்று இவர் எழுதிய பாடல் காதலில் தோல்வியடைந்தவர்களுக்கு மிகவும் இதமான ராகமாக இருந்து வருகிறது.
இந்த படத்திற்கு பிறகு, ஜீவா நடிப்பில் வெளியான ரவுத்திரம் படத்தில் இடம்பெற்ற அடியே உன் கண்கள் இரண்டும் என்ற காதல் பாடலை எழுதியிருப்பார். இந்த பாடல் வரிகளும், பாடல் படமாக்கப்பட்ட விதமும் அனைவரையும் கவர்ந்தது.
தொடர்ச்சியாக, பல படங்களில் பாடல் எழுதிவந்த லலிதானந்த் கோகுல் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி இயக்கத்தில் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் இடம்பெற்ற உன் வீட்டுல நான் இருந்தேனே பாடலை எழுதியுள்ளார். இந்த பாடல் தமிழ்நாட்டில் மாபெரும் ஹிட் அடித்தது.
இந்த பாடலுக்கு பிறகு, விஜய் சேதுபதி படமான ஜூங்காவிலும், அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன் இணைந்து நடித்த அன்பிற்கினியாள் படத்திலும் பாடல்களை எழுதியுள்ளார். மேலும், இயக்குனர்களான கோகுல் மற்றும் பாலாஜி சக்திவேல் ஆகியோர் இயக்கி வரும் படங்களிலும் பாடல்கள் எழுதியுள்ளார். லலிதானந்தின் மறைவிற்கு திரைப்பட பிரபலங்களும், நண்பர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்