மேலும் அறிய

Actor Vishal: 2026-ல் கட்சி தொடக்கம் - அரசியல் வருகை குறித்து அறிவித்த விஷால்!

2026-ம் ஆண்டு புதிய அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

2026-ம் ஆண்டில் புதிய அரசியல் கட்சி தொடங்குவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார். 

நடிகர் விஜய்யை தொடர்ந்து விஷாலும் புதிய அரசியல் கட்சி தொடங்குவதை உறுதிப்படுத்தியுள்ளார். மக்களுக்குத் தேவையானதை அவர்களின் பிரதிநிதியாக இருந்து முழுமையாக வழங்குவதே அரசியலின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று விஷால் ஏற்கனவே பலமுறை தெரிவித்திருந்தார். அரசியல் வருகை தொடர்பாக சென்னை வட பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், ”2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் என் பெயரும் இருக்கும். மக்களுக்கு போதுமான வசதிகள் இல்லை. அதனால்தான் நான் அரசியலுக்கு வருகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமால் 2004-ல் செல்லமே திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமானார், விஷால்.20 ஆண்டு கால திரைப் பயணத்தில் ரசிகர் மன்றத்தின் மூலம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். மக்கள் பணி தொடர்பாக ’என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன்.” என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார். 

விஷால் பேசும்போது அரசியல் மீதான ஆர்வம் குறித்து பேசி வந்தார். ’அரசியலில் ஆதாயம் எதிர்பார்த்து மக்கள் பணி செய்வது சரியானதில்லை;  இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன். என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் விஷால், 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்  போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவருடைய மனு நிராகரிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இரண்டு முறை நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார் விஷால். விஜய் அரசியல் வருகைக்கு அடுத்து விஷாலும் அரசியலுக்கு வருவது உறுதியாகியுள்ளது. அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஷால் தமிழ் புத்தாண்டு வாழ்த்து

விஷால் அரசியலுக்கு வந்தால் அவருடைய நிலைபாடு என்ன, என்ன பெயர் வைப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Embed widget