(Source: ECI/ABP News/ABP Majha)
Jo-Suriya Wedding anniversary: ’என்னோட சிங்கம்’ - திருமண நாளில், சூர்யாவுக்கு ஜோ கொடுத்த ஸ்பெஷல் கிப்ட்!
காலையிலேயே சூர்யாவுக்கு இன்ஸ்டாகிராமில் வாழ்த்தியிருந்தார் ஜோதிகா, இதற்கிடையே....
கோலிவுட்டின் எவர் ஹாட் ஜோடியான சூர்யாவும் ஜோதிகாவும் இன்று தங்களது 15-வது திருமணநாளைக் கொண்டாடுகின்றனர். இதற்காகக் காலையிலேயே சூர்யாவுக்கு இன்ஸ்டாகிராமில் வாழ்த்தியிருந்தார் ஜோதிகா.
View this post on Instagram
இதற்கிடையே தற்போது இன்னுமொரு சர்ப்ரைஸாகத் தன் கைப்பட வரைந்த சூர்யாவின் ஓவியத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் ஜோதிகா. இதுதவிர ஆண்சிங்கமும் பெண்சிங்கமும் குழைந்து அமர்ந்திருப்பதுபோன்ற ஓவியம் ஒன்றையும் வரைந்து பகிர்ந்துள்ளார்.
ஜோதிகா இவ்வளவு அழகாக வரைபவரா? என அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இந்த இரண்டு பென்சில் ஓவியங்களும் உள்ளன.
View this post on Instagram
ஜோதிகா தனது இன்ஸ்டா பதிவில்,’சரியான மனிதரைச் சந்திப்பது என்பது விதி. அவருடைய மனைவியாவது என்பது நான் எடுத்த முடிவு. ஆனால் அதே நபருடன் ஒவ்வொரு நாளும் மீண்டும் மீண்டும் காதலில் விழுவது என்பது என்னையும் மீறி நடந்த செயல்.அவர் அவராகவே இருப்பதால்தான் அது சாத்தியமானது. எனது பிள்ளைகளின் அப்பாவுக்கு, எனது கணவருக்கு,எனது சக நடிகருக்கு, சில நேரங்களில் எனது அம்மாவாகவும் இருப்பவருக்கு,மிக முக்கியமாக எனது ஆகச்சிறந்த நண்பனுக்கு, எனது சிங்கத்துக்கு இந்த நாளில் ஒரு குட்டிப் பரிசு’ எனக் குறிப்பிட்டுள்ளார்.