T Rajendar Health: முழுசா குணமாயாச்சு.. நெகிழ்ச்சியில் சிம்புவுக்கு முத்தமிட்ட டி.ஆர்.. வைரலாகும் வீடியோ..
நடிகர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்ட டி.ராஜேந்தர் பூரண நலம் பெற்றார்.
நடிகர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்ட டி.ராஜேந்தர் பூரண நலம் பெற்றார்.
தமிழ் சினிமாவின் பன்முக கலைஞர்களில் ஒருவர் டி ராஜேந்தர். இவருக்கு கடந்த மாதம் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வயிற்றில் இரத்தக்கசிவு இரத்தக்கசிவு ஏற்பட்டது தெரிந்த நிலையில், தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கடந்த ஜூன் 14 ஆம் தேதி மகன் சிலம்பரசன் மற்றும் குடும்பத்தினருடன் அமெரிக்காவிற்கு சென்றார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் பூரண குணமடைந்து விட்டதாக அவரது செய்தி தொடர்பாளர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவர் நாளை காலை 2 மணிக்கு சென்னை வருகிறார். அவருடன் இளைய மகன் குறளரசன், மகள் இலக்கியா, மருமகன் அபிலாஷ், பேரன் ஜேசன் ஆகியோர் நாடு திரும்புகின்றனர். நாளை சென்னை வரும் டி.ஆர்.முதற்கட்டமாக தனக்கு உதவி செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி கூற இருக்கிறார்.
View this post on Instagram
தான் முழு உடல் நலம் பெற்று மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் துடிப்புடன் திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்த ரசிகர்கள், குடும்ப நண்பர்கள், கலையுலக நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் டி ஆர் நன்றியை தெரிவித்து இருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்