Survivor Tamil | கதை கட்றாரு என சொன்ன ராம்.. கம்பி கட்றாரு என சொன்ன உமாபதி.. வெளியேறிய காடர் லீடர்!
வெள்ளை முத்து சிலம்பை எடுத்ததால், காயத்ரி எலிமினேட் ஆனதாக அறிவித்தார் அர்ஜுன். காயத்ரியும், இந்திரஜா, ஸ்ருஷ்டி இருக்கும் தனித்தீவுக்கு போவாரா?
பரபரப்பான நகர்வில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சர்வைவர் ஷோ நகர்ந்து கொண்டிருக்கிறது. நேற்று இரு அணிகளிடமும் அர்ஜூன் பேசினார். பலவீனமான இருவர் வெளியேற்றப்பட்டதால் அணி பலமாக இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா? என கேட்டார். கலவையான பதில் அவருக்கு கிடைத்தது. இமியூனிட்டி சேலஞ்ச் அடுத்ததாக அணியினருக்கு வழங்கப்படும் என்று அர்ஜூன் தெரிவித்தார். ‛இமியூனிட்டி ஐடல்’ ஒன்றை அறிமுகம் செய்தார். அதோடு வாள் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டது. வெற்றி பெற்றவருக்கு அது வழங்கப்படும் என்றார். இரு மிதவைக்கு நடுவே ஒரு தென்னை மரம் சாய்க்கப்பட்டு, அதில் குழுவாக கீழே விழாமல் நிற்க வேண்டும். அவர்களை ஒருவர் கடந்து செல்ல வேண்டும். இது தான் போட்டி. தோல்வியடையும் அணியில் இருந்து ஒருவர் எலிமினேட் ஆனார். அதில் வேடர்கள் சிறப்பான வெற்றியைப் பெற்றனர்.
ட்ரைபிள் பஞ்சாயத்திற்கு அழைப்பு!
ராம் செய்த தவறுதான் தோல்விக்கு காரணம் என காடர் அணியின் லீடர் காயத்ரி தெரிவித்தார். அது குறித்து அணியினரிடம் கருத்து கேட்கப்பட்டது. ராம், சரண் ஆகியோரின் தவறுகள் தான் அந்த தோல்விக்கு காரணம். எனவே அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. தனக்கு சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று சரண் கூறினார். ட்ரைபிள் பஞ்சாயத்தில் தோல்வியடைந்த அணி தன்னை சந்திக்க வேண்டும் என அர்ஜூன் அவர்களிடம் கூறினார். இரண்டாவது டாஸ்கை வெற்றி பெற்ற வேடர் அணி, கூட்டு முயற்சியில் அந்த வெற்றியை பெற்றது. இதன் மூலம் இம்யூனிட்டி ஐடைலை வேடர் அணித்தலைவர் லெட்சுமி பெற்றார். இந்த வாள் இருப்பதால் வேடர் அணி எலிமினேஷனில் பங்கேற்காது என்று அர்ஜூன் தெரிவித்திருந்தார். இன்றைக்கு ப்ரோமோக்களில் ராம் தானாகவே சென்று, தன்னால் டாஸ்க்கில் தோற்றதாகவும் தன்னை எலிமினேட் செய்துவிடுமாறும் சொல்கிறார். அனைவரும் சேர்ந்து டிஸ்கஷனில் இருக்கும்போது ராம் மீதான குற்றச்சாட்டுகள் வைப்பதையும், காயத்ரியை எலிமினேட் செய்ய நாமினேட் செய்வதையும் பார்க்கமுடிகிறது..
இருக்கு.. இன்னைக்கு பஞ்சாயத்து இருக்கு..
ட்ரைபல் பஞ்சாயத்தை தொடங்குவதற்கு முன்பு அர்ஜுன் அனைவரையும் தீப்பந்தம் ஒன்றை எடுத்து பொருத்திக்கொள்ளுமாறு சொல்கிறார். தீ தான் ஆதாரம் என்கிறார். பஞ்சாயத்தை தொடங்கி காயத்ரியை முதலில் பேசச் சொன்னபோது, ராம்தான் தோல்விக்கு காரணம் என்பதை சொல்லி உறுதி செய்கிறார். ராம் முழு தோல்வியும் என்னால் ஏற்பட்டதுதான் என்பதை ஒப்புக்கொண்டார். டீமுக்குள்ளேயும் திட்டம் இல்லை. அதை நானும் சொல்லவில்லை என இப்படியும் அப்படியும் பேசினார் ராம். ”ஏன் அன்னைக்கு டீம் பாசிட்டிவ்னு சொன்னீங்க, ஏன் இன்னைக்கு எல்லாமே நெகட்டிவ்னு சொல்றீங்கன்னு” அர்ஜுன் கேட்க ஆரம்பித்தார். தனக்கு எதிராக கதை கட்டுவதாக ராமும், தேவையில்லாத விஷயங்களை பேசி கம்பி கட்டுற கதையைப் பேசுவதாக உமாபதியும் மாற்றி மாற்றி குற்றம் சாட்டிக்கொண்டனர். விக்ராந்த் எல்லாரையும் தான் எப்படி கூல் செய்தேன் என சொல்லிக் கொண்டிருந்தார்.
நீ இருப்ப நாங்க இருப்போமா... விஜயலஷ்மி சுருக்
காயத்ரி தேவையில்லாத கோபங்களைக் காட்டுவதாகவும், ராம் தனியாகவே சோலோ பெர்ஃபாமன்ஸ் கொடுப்பதாகவும் விஜயலட்சுமி விமர்சித்தார். கோபப்படுவது மனித இயல்புதான் என்றும், மீண்டும் வந்து நான் சமாதானம் ஆகிவிட்டதாகவும் காயத்ரி தன்னை நியாயப்படுத்த முயன்றார். இவர் அனைத்தையும் புரிந்துகொள்ளும் வரை இந்த டீமில் எத்தனை பேர் இருப்போம் என தெரியாது. எல்லா நிமிடங்களும் முக்கியம் என்றார். (நீ இருப்ப.. நாங்க இருப்போமா Mode) காயத்ரிக்கு ஒரு லீடராக மார்க் கொடுக்கச் சொன்னால் என்ன கொடுப்பீர்கள் என கேட்டதற்கு, ”விஜயலட்சுமி 3 மார்க்கும், உமாபதி 5 மார்க்கும், லேடி கேஷ் 6 மார்க்கும், சரண் 5 மார்க்கும், விக்ராந்த் 3 மார்க்கும், ராம் 5 மார்க்கும் (ராம் மார்க் போட்டபோது, அடப்பாவி லுக் கொடுத்த காயத்ரி) கொடுத்தனர்.
View this post on Instagram
யார் சொன்னா? அவனே சொன்னான்
இந்திரஜாவை நாமினேட் செய்தது சரியா என அர்ஜுன் கேட்டபோது, இந்திரஜா எல்லா வேலையும் செய்ததாக சொன்னார் விக்ராந்த். சின்ன பொண்ணா இருந்துக்கிட்டு, இவ்வளவு தூரம் வந்திருக்கிறதே பெரிய விஷயம், இந்திரஜாவை அனுப்பியிருக்கக்கூடாது என்றார் விஜயலஷ்மி, லேடி கேஷ் காயத்ரியின் காலை வாராமல் கொஞ்சம் சமாளித்தார். சரண் பேசும்போது, நான் லீடரானால் ராமைத்தான் தேர்ந்தெடுத்திருப்பேன் என்றார். கடைசியில் என்னைத்தான் நாமினேட் செய்திருக்கவேண்டும். இந்திரஜாவை அல்ல என ராமே சொல்லிவிட்டார்.
வெள்ளை முத்துக்கள் கொடுத்த தீர்ப்பு
அர்ஜுன் ஆணையிட அனைவரும் எலிமினேஷன் வாக்கை செலுத்தினார்கள். 4 வாக்குகள் காயத்ரியை வெளியேற்றும் முடிவைக் கொடுத்திருந்தது. கடைசியான வாய்ப்பாக, அப்போது தங்க முத்துக்கள் கொண்ட சிலம்புகளையும், வெள்ளை முத்துக்கள் கொண்ட சிலம்புகளையும் வைத்த குடுவையில் இருந்து வெள்ளை முத்து சிலம்பை எடுத்ததால், காயத்ரி எலிமினேட் ஆனதாக அறிவித்தார் அர்ஜுன்.
காயத்ரியும், இந்திரஜா, ஸ்ருஷ்டி இருக்கும் தனித்தீவுக்கு போவாரா, அல்லது வீட்டுக்குப் போவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.