மேலும் அறிய

Rajinikanth : சாதிச்சுட்டீங்க பாலாஜி...கருப்பு படம் பார்த்து ரஜினி கொடுத்த ரியாக்‌ஷன்

சூர்யாவின் கருப்பு திரைப்படத்தைப் பார்த்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னை போனில் அழைத்து பாராட்டியதாக இயக்குநர் ஆர் ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள கருப்பு திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. கருப்பு திரைப்படத்தை பார்த்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு போன் செய்து பாராட்டுக்களை தெரிவித்ததாக ஆர் ஜே பாலாஜி ஹாலிவுட் ரிப்போர்டர் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் சூர்யாவின் 45 ஆவது படமாக கருப்பு படம் உருவாகியது. பல்வேறு சவால்களை கடந்து கடந்த மே 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான கருப்பு பாக்ஸ் ஆபிஸில் 250 கோடி வரை வசூல் செய்துள்ளது. மூன்றாவது வாரத்தில் வெற்றிநடை போடும் இப்படம் விரைவில் ரூ300 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருப்பு படத்தின் வெற்றியை கொண்டாடி வரும் படத்தின் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி ஒவ்வொரு மாவட்டத்திற்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்து உரையாடி வருகிறார். 

விஜய்க்கு எழுதிய கதை

கருப்பு படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை படத்தின் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி பகிர்ந்துகொண்டு வருகிறார். கருப்பு படத்தின் கதையை முதலில் விஜய்க்கு சொன்னதாக அவர் தெரிவித்துள்ளார். "தனது கடைசி படத்திற்காக விஜய் கதை கேட்டு வந்தபோது இந்த கதையை அவருக்கு சொன்னேன். அப்போது அவர் எச் வினோத்திடமும் கதை கேட்டு வந்தார். கருப்பு படத்தின் கதை அவருக்கு பிடித்திருந்தாலும் அவருக்கு தனது கடைசி படம் எப்படியான படமாக இருக்க வேண்டும் என்பதில் சில எதிர்பார்ப்புகள் இருந்தன. அதனால் ஒரு வாரம் கழித்து முடிவை சொல்வதாக சொன்னார். ஒரு வாரத்திற்கு பின் போன் செய்து தனது முடிவை தெரிவித்தார். விஜய் சார் இந்த கதையை கேட்டது தான் சூர்யாவிடம் கதை சொல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. விஜய் கேட்ட கேள்விகளால் இந்த கதையில் நான் நிறைய திருத்தங்களை செய்வதற்கு உதவியாக இருந்தது." என ஆர் ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.

கருப்பு படத்தை பார்த்து பாராட்டிய ரஜினி

இதுகுறித்து ஆர் ஜே பாலாஜி கூறுகையில் " சின்ன வயதில் இருந்து ஒரு நல்ல படம் வந்தால் ரஜினி சார்  அந்த படக்குழுவை அழைத்து ரஜினி பாராட்டுவதை நான் பார்த்து வருகிறேன். இந்த படம் எடுப்பதற்கு முன்பே ரஜினி சார் படம் பார்த்து பாராட்ட வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். அதேபோல் ரஜினி படம் பார்த்து எனக்கு போன் செய்து பேசினார் . ரஜினி பேசுகையில் " பாலாஜி சூப்பர் சூப்பர் , சாதிச்சுட்டீங்க எவ்வளவு பெரிய ஹிட். சீக்கிரம் சந்திப்போம்' என்று கூறியதாக ஆர் ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget