Pugazh | பிறந்தநாள் பரிசு.. குக் வித் கோமாளி புகழுக்கு ரஜினி கொடுத்த சர்ப்ரைஸ்.!
சமீப காலமாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு படையெடுப்பது ட்ரெண்டாக மாறிவிட்டது. தொடக்கம் எதுவாக இருந்தாலும் ஒரு கலைஞனுக்கு திறமை இருந்தால் அவரை திரையுலகம் அங்கீகரிப்பது ஆரோக்கியமான ஒன்றுதான்.
விஜய் டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ‘புகழ்’. புகழின் ஒவ்வொரு வளர்ச்சியையும் அவரது ரசிகர்கள் தங்கள் வளர்ச்சியை போல கொண்டாடி வருகின்றனர். அந்த அளவுக்கு ரசிகர்களின் அன்பை பெற்றவராக உள்ள கலைஞர்களுள் புகழும் ஒருவர். இன்று குக் வித் கோமாளி புகழ் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து செய்தி அனுப்பி புகழை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். இது குறித்த ஆடியோவை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்த புகழ் “ என் வாழ்நாளில் மறக்க முடியாத பிறந்தநாள் இது. என் தலைவன் வாழ்த்துகளோட இந்த நாள நான் தொடங்கறேன். திரை உலகிற்கு வருவதற்கே அவர் ஒரு ரோல் மாடல் எனக்கு. அப்படி அவர பார்த்து ரசிச்சு வளர்ந்த எனக்கு அவர் வாயால வாழ்த்து சொல்லி இருக்கிற மகிழ்ச்சிய எப்படி வெளிப்படுதறதுனு தெரியல. இப்படி ஒருநாள் என் வாழ்க்கைல வரும் னு நான் கனவுல கூட நினைச்சு பார்த்தது இல்லை. நான் எந்த இடத்துக்கு போனாலும், அவருக்கு இருக்கிற ரசிகர்கள்ல நானும் ஒருத்தன் அது தான் எனக்கு பெருமை. ரொம்ப சந்தோஷமா இருக்கு. அன்பும், நன்றிகளும் மக்களே.." என குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
அந்த ஆடியோ பதிவில் “வணக்கம் புகழ்..இன்று பிறந்தநாள் கொண்டாடும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்..கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் “ என தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மேலும் புகழின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக கொண்டாடி வருகின்றனர்.
View this post on Instagram
சமீப காலமாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு படையெடுப்பது ட்ரெண்டாக மாறிவிட்டது. தொடக்கம் எதுவாக இருந்தாலும் ஒரு கலைஞனுக்கு திறமை இருந்தால் அவரை திரையுலகம் அங்கீகரிப்பது ஆரோக்யமான ஒன்றுதான். அந்த வகையில்சந்தானம், சிவகார்த்திகேயன், பிரியா பவானி சங்கர் என பலர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால் பதித்து வெற்றியும் கண்டுள்ளனர். அந்த வரிசையில் புகழும் இணைந்துள்ளார். தற்போது பல படங்களில் புகழ் காமெடியனாக களம் கண்டு வருகிறார். அவரின் புகழ் மேலும் உச்சத்தை அடைய வாழ்த்துக்கள்