ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினி..விடிவானில் ஒளிர்மீன்கள் விண்ணெல்லாம் ஒளிரட்டும் என்ற கமல்..!
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் தங்களது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார்.
Celebirity Diwali Wishes: சென்னை போயஸ் கார்டன் வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார். தன்னை சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறிய ரசிகர்களுக்கு ரஜினியும் தனது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.
தீப ஒளி பொங்கும் தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். மகிழ்ச்சி பொங்கும் நாளாக பார்க்கப்படும் தீபாவளி பண்டிகைக்கு மக்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து கூறி மகிழ்கின்றனர். அந்த வரிசையில் தங்களின் ரசிகர்களுக்கு திரை பிரபலங்கள் தீபாவளி வாழ்த்து பகிர்ந்துள்ளனனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார். சென்னை போயஸ் இல்லத்தில் தன்னை சந்தித்த ரசிகர்களை பார்த்து கையசைத்த ரஜினிகாந்த், தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார்.
இதேபோல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ”விடிவானில் ஒளிர்மீன்கள் விண்ணெல்லாம் ஒளிரட்டும் ஐப்பசியின் மழைப்பொழிவில் அகமெல்லாம் மலரட்டும் ஆகாயம் பார்த்திருக்கும் அருமைநிலம் செழிக்கட்டும் தீபாவளி நாளில் திசையெட்டும் பொலியட்டும் “ என கூறியுள்ளார்.
விடிவானில் ஒளிர்மீன்கள்
— Kamal Haasan (@ikamalhaasan) November 12, 2023
விண்ணெல்லாம் ஒளிரட்டும்
ஐப்பசியின் மழைப்பொழிவில்
அகமெல்லாம் மலரட்டும்
ஆகாயம் பார்த்திருக்கும்
அருமைநிலம் செழிக்கட்டும்
தீபாவளி நாளில்
திசையெட்டும் பொலியட்டும்.
இதேபோன்று ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இயக்குநர் கார்த்தி சுப்புராஜ், யானைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார்.
From the Bottom of my Heart..... Thanks a Ton to God.... Nature.... Elephants.... & The AUDIENCE 🙏🏼🙏🏼
— karthik subbaraj (@karthiksubbaraj) November 12, 2023
Thanks a lot to every Press n Media for showering praises on the film 🙏🏼🙏🏼
Wish you all a Very Happy Diwali 🪔🪔🪔
Overwhelmed with Love shown in the theatres so far for our… pic.twitter.com/65FdyxYBZl
நடிகர்கள் யோகி பாபு மற்றும் மாதவன் உள்ளிட்டோர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் என டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
Happy Deepavali everyone pic.twitter.com/WULdSlNFvs
— Yogi Babu (@iYogiBabu) November 11, 2023
Wish each and every one of you a very HAPPY AND WONDERFUL DIWALI and a magnificent Festival season ahead. May God bless all of you with his love, best of his blessing and peace and prosperity. ❤️❤️❤️🙏🙏 pic.twitter.com/uT9VjsqScW
— Ranganathan Madhavan (@ActorMadhavan) October 24, 2022
இவர்கள் மட்டுமின்றி பால்வுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை பிரியங்கா சோப்ரா, ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.