Senthil Ganesh: 50 லட்சம் வீடு பரிசு; ஆனால் இப்படி ஒரு பிரச்சனை இருந்தது! உண்மையை உடைத்த சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்!
சூப்பர் சிங்கரில் டைட்டில் வின்னராக எங்களுக்கு 50 லட்சம் வீடு பரிசாக கிடைச்சது, ஆனால், கைக்கு வந்தது 35 லட்சம் மதிப்பிலான வீடு தான் என்று செந்தில் கணேஷ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரானவர் நாட்டுப்புற கலைஞர் செந்தில் கணேஷ். இந்த நிகழ்ச்சியில் ராஜலட்சுமியும் கலந்து கொண்டு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற செந்தில் கணேஷிற்கு 50 லட்சத்திற்கான வீடு பரிசாக கொடுக்கப்பட்டது.
அவர்களுக்கு கிடைத்தது 50 லட்சம் மதிப்பிலான வீடு. ஆனால் அதை பெறுவதில் ஒரு சிக்கல் இருந்ததால் 35 லட்சம் வீடு தான் எங்கள் கைக்கு வந்தது என அவர்கள் இருவரும் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கூறி உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியிருப்பதாவது: சூப்பர் சிங்கர் 8ஆவது சீசனில் டைட்டில் வின்னராக வந்ததற்கு 50 லட்சம் மதிப்பிலான வீடு பரிசாக கொடுக்கப்பட்டது. ஆனால் எங்களுக்கு கையில் கிடைத்தது 35 லட்சம் மதிப்பிலான வீடு.
ஏனென்றால் 50 லட்சம் வீடு கிடைக்க 18 சதவிகிதம் வரி கட்ட வேண்டும் அப்படியென்றால் கிட்டத்தட்ட ரூ.15 லட்சம் கட்ட வேண்டும். எங்களுக்கு 2 கண்டிஷன் சொன்னார்கள். அதில், ரூ.15 லட்சம் கொடுத்தால் 50 லட்சம் வீடு எடுத்துக் கொள்ளலாம். 2ஆவது ஆப்ஷன் 15 லட்சம் கட்டவில்லை என்றால் 35 லட்சம் மதிப்பிலான வீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்றார்கள்.
ஏற்கனவே கிராமத்தில் எங்களுக்கு வீடு இருக்கிறது. அதனால், ஈரோடு மாவட்டம் உக்கரம் பகுதியில் வீடு தருகிறோம் என்றார்கள். ஆதலால் அதனை நாங்கள் ஏற்று கொள்ளவே 15 லட்சம் குறைத்து 35 லட்சம் மதிப்பிலான வீட்டை பத்திரப்பதிவு செய்து கொடுத்தார்கள் என்று செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இருவரும் இணைந்து ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்கள். இதே போன்று தான் சூப்பர் சிங்கர் 10 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான அருணாவுக்கு 60 லட்சம் மதிப்பிலான வீடு பரிசாக கொடுகப்பட்டது. ஆனால், அதற்கு 15 லட்சம் வரி கட்ட வேண்டி இருந்தது. அதற்கு எங்களிடம் போதுமான பணம் இல்லை. ஒரு வருடம் டைம் கேட்டிருந்தோம். இப்போது வரையில் வாடகை வீட்டில் தான் வசிக்கிறோம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.