Soundarya Bala Nandakumar | ”தப்பு செஞ்சவன்தான் பயப்படணும்.. முதல்ல Parents குழந்தைகளை நம்புங்க..” பாடகி சௌந்தர்யா பளிச்...
சூப்பர் சிங்கர் புகழ் நடிகையும், பாடகியுமான சௌந்தர்யா பாலா நந்தகுமார் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
![Soundarya Bala Nandakumar | ”தப்பு செஞ்சவன்தான் பயப்படணும்.. முதல்ல Parents குழந்தைகளை நம்புங்க..” பாடகி சௌந்தர்யா பளிச்... Super Singer fame actress and singer Soundarya Bala Nandakumar's video about violence against women in the community has gone viral on social media Soundarya Bala Nandakumar | ”தப்பு செஞ்சவன்தான் பயப்படணும்.. முதல்ல Parents குழந்தைகளை நம்புங்க..” பாடகி சௌந்தர்யா பளிச்...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/21/7e45876b5a82f76993f9fc77fe70f7e0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சூப்பர் சிங்கர் புகழ் நடிகையும், பாடகியுமான சௌந்தர்யா பாலா நந்தகுமார் ஒரு தனியார் யூ டியூப் சேனலில் ஒளிபரப்பான செலிப்ரிட்டி ஸ்டார் டான்ஸ் ஷோவில் பங்கேற்று வருகிறார். இந்த செலிப்ரிட்டி ஸ்டார் டான்ஸ் ஷோவில் கலா மாஸ்டர் ஜட்ஜாகவும், அறந்தாங்கி நிஷாவும் தொகுப்பாளினியாகவும் பங்கேற்றுள்ளனர். அதில், சௌந்தர்யா அந்த நிகழ்ச்சியின்போது சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், "நம்ம சைடு தப்பு இல்லாத வரைக்கும் எதுக்காவும் பயப்பட தேவையில்லை. தப்பு செஞ்சுவன் தான் பயப்படணும், நம்ம எதுக்காக பயப்படணும்..? பெண்கள் இந்த பாலியல் வன்கொடுமை காரணமா தங்கள் வாழ்க்கையை முடிச்சுக்கணும் ஏன் நினைக்குரீங்க. இந்த மாதிரி பெண்கள் எடுக்கும் தவறான முடிவுதான் தப்பு செய்யுற ஆண்களுக்கு மேலும் ஒரு வெற்றிய கொடுத்து அந்த தப்புக்கு நம்மலே வழிவிடுற மாதிரி இருக்கு.
பெற்றோர்கள் ப்ரஸ்ட் கண்ண திறந்து பாருங்க.எப்ப பார்த்தாலும் பொண்ணு ஏதோ பிரச்சனைன்னு சொல்ல வந்தா, அங்க என்ன நடந்துச்சு, இது எப்படி இப்படி ஆச்சுன்னு அவங்கள போட்டு தொல்லை பண்ணாதீங்க. உங்க பொண்ணுக்கு ஒரு பிரச்சனையா பக்கதுல உட்கார்ந்து என்ன நடந்துச்சுன்னு காது கொடுத்து கேளுங்க, அவங்க சொல்ல முடியாம தவிச்சாலும் நாங்க இருக்கோம்னு ஆறுதல் சொல்லி முழுசா கேளுங்க.
பெண்களுக்கு ஒரு பிரச்சனையா அவங்களுக்கு சப்போர்ட் பண்ண அவ்வளவு பெண்கள் இருக்கோம். கோவம் வருது. பெண்களுக்கு இந்த கொடுமைக்காக வாழ்க்கைய முடிச்சுக்கணுமா"என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.
முன்னதாக, சௌந்தர்யா பாலா நந்தகுமார் 2013 ம் ஆண்டு வெளியான 6 மெழுகுவர்த்திகள் திரைப்படத்தில் பாடகியாக அறிமுகமானார். மேலும், பல குறும்படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார். தொடர்ந்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கரின் சீசன் 3 மற்றும் 4ல் சௌந்தர்யா பங்கேற்றார்.
பகல் நிலவு சீரியலில் ரேவதியாக சௌந்தர்யா பாலா நந்தகுமார் நடித்த கதாபாத்திரம் அனைவரையும் ஈர்த்து இவருக்கென ரசிகர் பட்டாளம் உருவானது. கடைசியாக இவர் என்னங்க சார் உங்க சட்டம் படத்தில் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)