ஒரே ஒருமுறை நீங்க சிரிக்கணும்மா.. இன்னும் என் கூட இருக்கீங்க.. அம்மாவின் எமோஷ்னல் கதை பகிர்ந்த சன்னி லியோன்..
பலருக்கு கனவு நாயகியாக இருக்கும் சன்னி லியோன், தன்னுடைய நடிப்பு, நடனம் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னைப்பிரிந்து 14 ஆண்டுகள் ஆனாலும் என்றும் நீங்கள் என்னுடன் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றும், உங்கள் புன்னகையைப்பார்க்க நான் எதையும் தருவேன் அம்மா என்று எமோஷ்னலாக பதிவிட்டுள்ளார் பாலிவுட் நடிகை சன்னி லியோன்.
சன்னி லியோன் என்ற பெயரைக்கேட்டாலே இளைஞர்கள் பலர் உற்சாகம் அடைய ஆரம்பித்துவிடுவார்கள். அந்தளவிற்கு இளைஞர்களின் நெஞ்சில் நீங்கா ஒரு இடத்தைப்பிடித்துள்ளார் நடிகை சன்னி லியோன். இவர் இந்தியாவில் சிறு வயதிலேயே அமெரிக்காவில் குடும்பத்தினருடன் குடிபெயர்ந்தவர். தனக்கு பிடித்த மாடலிங்கில் துறையில் கால்பதித்து வெற்றிக்கண்ட இவர், சில ஆபாசப்படங்களில் நடித்ததன் மூலம் உலக அளவில் மிகவும் புகழ் பெற்றார். ஆனால் தற்போது இதுபோன்ற படங்களில் எதுவும் நடிக்காமல் பாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். இவர் பாலிவுட் மட்டுமின்றி இந்திய மொழிப்படங்களிலும் தொடர்ந்து நடித்துவருகிறார்.
வெள்ளித்திரையின் மூலம் மட்டுமில்லாது சன்னி லியோன் கலந்துகொள்ளும் இசை நிகழ்ச்சிகளும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக வருவது உண்டு. தன்னுடைய கவர்ச்சியான நடிப்பு மற்றும் நடனத்தினால் ரசிகர்களின் கனவு நாயகியாக தற்போதும் வலம் வருகிறார். இதுபோன்று பொதுவாழ்வில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினால் சொந்த வாழ்வில் கஷ்டங்கள் பல இருக்கும் என்பார்கள் அல்லவா? அதற்கேற்றால் போல் நடிகை சன்னி லியோனும், கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பாக பிரிந்த தனது தாயின் நினைவுகளை டிவிட்டர் வாயிலாக பகிர்ந்துள்ளார்.
Some people miss their parents the most when things r going wrong. But I miss you d most in all our happy moments & special occasions!
— Agent M (@SunnyLeone) March 18, 2022
14 years ago today you left us but everyday I miss u more & would give anything to see u smile and call me Googu one more time. Love you Mumma! pic.twitter.com/HhcZpR4flJ
அதில், குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தைப்பதிவிட்டு, “14 ஆண்டுகளுக்கு முன்பு இன்று நீங்கள் எங்களை விட்டு சென்றீர்கள். ஆனால் தினமும் நான் உன்னை பிரிந்து தவித்துக்கொண்டு இருக்கிறேன். மேலும் உங்களது புன்னகைப்பதைப் பார்க்க எதையும் தருவேன், மேலும் என்னை கூகு என்று அழைப்தை மறக்க முடியாது. லவ் யூ அம்மா! என்று பதிவிட்டுள்ளார்.
The past memories are so painful, those golden childhood days when parents shower all their love on their children are now just memories, the good news is same love you and Daniel showering on your children today, the life goes on
— manjeet singh (@manjeet96743012) March 18, 2022
இதனைப்பார்த்த நெட்டிசன்கள், “நிச்சயம் தாயின் அன்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது“, குழந்தைப்பருவம் தான் வாழ்வில் பெரிய பொக்கிஷம் என்பது போன்ற பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர். குறிப்பாக ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருக்கும் சன்னி லியோன், தன்னுடைய கவர்ச்சி நடனங்கள் மற்றும் நடிப்பின் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்திவருகிறார். இவர் பாலிவுட்டில் மட்டுமின்றி இந்திய அளவில் மற்ற மொழிப்படங்களிலும் பிசியாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.