Nivisha Hospitalized : நிவிஷாவுக்கு என்ன ஆச்சு? சீரியலில் இருந்து விலகியவர் மருத்துவமனையில் இருக்கிறாரா?
Nivisha hospitalized : சன் டிவியில் ஒளிபரப்பாகும் மலர் சீரியலின் செகண்ட் ஹீரோயின் நிவிஷா தற்போது உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் அறிந்து அவரின் ரசிகர்கள் கவலை.
சன் டிவியில் ஒளிபரப்பான மெகா சீரியல்களில் மிகவும் பிரபலமான தொடரான 'தெய்வ மகள்' சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை நிவிஷா. அந்த சீரியலில் அவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ஜீ தமிழ், விஜய் டிவி என பல தொலைக்காட்சி சேனல்களிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார். முள்ளும் மலரும், ஈரமான ரோஜாவே, யாரடி நீ மோகினி உள்ளிட்ட ஏராளமான தொடர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
செகண்ட் ஹீரோயின் :
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'மலர்' சீரியலில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து வந்தார். இரண்டாவது ஹீரோயினாக இருந்த போதிலும் நிவிஷாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இருப்பினும் ஒரு சில காரணங்களால் சீரியலில் இருந்து விலகுவதாக அவரே தெரிவித்து இருந்தார். இதனால் அவரின் ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர்.
விலக என்ன காரணம் ?
நிவிஷாவிற்கு வேறு ஒரு சீரியலில் லீட் ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் தான் மலர் சீரியலில் இருந்து விலகிவிட்டார் என்றும், அவருக்கு இந்த சீரியலில் சரியான அங்கீகாரம் கிடைக்காததால் தான் விலகினார் என்றும் பல விமர்சனங்கள் எழுந்தன.
மருத்துவமனையில் அனுமதி :
சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நிவிஷாவுக்கு பேன் ஃபாலோவர்ஸ் அதிகம். அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், மெல்ல மெல்ல குணமாகி வருவதாகவும் விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் எனவும் தெரிவித்து இருந்தார். இதை பார்த்து பதறிப்போன நிவிஷா ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அவருக்காக பிராத்தனை செய்து வருகிறார்கள்.
இருப்பினும் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறவில்லை. மலர் சீரியலில் முக்கியத்துவம் கொடுக்காதது தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என ரசிகர்கள் பலரும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். விரைவில் நிவிஷாவை வேறு சில சீரியல்களின் மூலம் சந்திக்கலாம் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் அவரின் சின்னத்திரை ரசிகர்கள்.