Alia Manasa : பிரபல சின்னத்திரை நடிகைக்கு எலும்பு முறிவு... உருக்கமான பதிவை பார்த்த ரசிகர்கள் பதட்டம்
சன் டிவி 'இனியா' தொடரின் நாயகி ஆலியா மானஸாவின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு பேராய கட்டோடு உருக்கமான வீடியோ ஒன்றை இன்ஸ்டகிராமில் போஸ்ட் செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை ஆலியா மானஸா. விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 1 மூலம் அறிமுகமான இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த சீரியலில் ஜோடியாக நடித்த சஞ்சீவ் உடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடித்து வந்த ஆலியா மானஸா தனது இரண்டாவது பிரசவத்திற்காக நடித்து வந்த சீரியலில் இருந்து விலகினார். விஜய் டிவியில் இருந்து விலகிய ஆலியா மானஸா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய சீரியலான 'இனியா' தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஆலியா மானஸா மற்றும் சஞ்சீவ் இருவரும் வெகேஷனுக்கு துபாய் சென்று இருந்தனர். அங்கே அவர்கள் மிகவும் சந்தோஷமாக புத்தாண்டை கொண்டாடினர். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இந்த தம்பதியினர் துபாயில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து லைக்ஸ்களை குவித்தனர்.
ஆலியா மானஸாவிற்கு எலும்பு முறிவு :
குடும்பம், கேரியர் என மிகவும் பிஸியாக இருந்து வரும் ஆலியா மானஸா எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து ஆலியா மானஸா உருக்கமான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் வெளியிட்டு அவரின் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார். "இந்த எலும்பு முறிவில் இருந்து நான் வெளிவர உங்கள் அனைவரின் பிராத்தனையும் தேவை. விரைவில் இதில் இருந்து வெளிவர எனக்கு உதவுங்கள். என்னால் நடக்க கூட முடியவில்லை. ஆனால் நொடிக்கு நொடி நான் தேறி வருகிறேன் அதற்கு காரணம் உங்கள் அனைவரின் பிராத்தனைகள் தான். அதற்கு எனது நன்றிகள்.
View this post on Instagram
இந்த விபத்தின் மூலம் எனது கணவர் என்னை எந்த அளவிற்கு நேசிக்கிறார் என்பதை கடவுள் புரிய வைத்துள்ளார். அவர் என்றுமே என்னை மிகவும் நேசிக்கிறார் என்பது எனக்கு தெரியும். ஆனால் நான் இப்போது இந்த வலியை அனுபவிப்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்காக அவர் பயங்கரமாக அழுகிறார். நான் இப்படி கஷ்டப்படுவதை அவர் விரும்பவில்லை. இப்படி ஒரு அன்பான கணவன் கிடைத்த நான் தான் இந்த உலகத்திலேயே மிகவும் அதிர்ஷ்டமான பெண். இ லவ் யூ பாப்பு குட்டி என உருக்கமான பதிவை போஸ்ட் செய்துள்ளார்.