மேலும் அறிய

Subsidy for Films : திரைப்பட விருது மற்றும் மானியம் பெறுவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு... கடைசி நாள் என்று? 

Subsidy for films : தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் குறைந்த பட்ஜெட்டில் தரமான படங்களுக்கு வழங்கப்பட இருக்கும் அரசு மானியத்தின் விண்ணப்ப தேதியின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு, திரைத்துறையின் வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமூக நோக்கத்துடன் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு மேம்படும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தரமான திரைப்படங்கள் வெளியாவதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு 7 லட்சம் ரூபாய் அரசு மானியமாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. 

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் திரைக்கதைக்கு தான் அதிக அளவிலான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதுவே காலப்போக்கில் அப்படியே தலைகீழாக மாறி போய் ஸ்டார் ஹீரோக்களை வைத்து பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்தால் பாக்ஸ் ஆபிசில் அதிக அளவிலான வசூலை ஈட்டிவிடலாம் என்ற ண்ணம் தான் தற்போது ட்ரெண்ட்டாகி வருகிறது. 

இது ஒரு பக்கம் இருந்தாலும் சிறிய அளவு பட்ஜெட் கொண்ட புகைப்படங்கள், சமூக அக்கறை கொண்ட தரமான திரைக்கதை கொண்ட திரைப்படங்களும் வெளியாகி வந்தாலும் பெரிய பட்ஜெட் படங்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் சிறிய பட்ஜெட் படங்களால் திரையரங்கில் பெரிய அளவில் சாதிக்க முடியாமல் போகிறது. இந்த நிலை மாறவேண்டும் என்ற நோக்கத்துடன் தான் தமிழக அரசு இந்த மானிய திட்டத்தை அறிவித்துள்ளது. 

அதன்படி 2019 முதல் 2022 வரை தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், 2018 முதல் 2022 வரை குறைந்த பட்ஜெட்டில் வெளியான தரமான திரைப்படங்கள் மற்றும் 2015 முதல் 2022 வரை சின்னத்திரை விருதுகள் வழங்குவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறுவதற்காக கால அவகாசம் நவம்பர் 24, 2023  முதல் ஜனவரி 8 , 2024 வரை என்ற அறிவிப்பை நாளிதழ்கள் மூலம் வெளியிட்டனர். 

இந்த கால அவகாசத்தை நீட்டிக்க சொல்லி  தமிழக அரசிடம் திரைத்துறையினர் கோரிக்கை வைத்தனர். அவர்களின் இந்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஜனவரி 30, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட இந்த விண்ணப்பங்களை  திரைப்பட துறையினர் நல வாரியத்திற்கு ஜனவரி 30ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது மக்கள் தொடர்பு துறை.  இந்த நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் பல படைப்பாளிகளுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க: Vijayakanth: ”என்னால் இதைத்தான் செய்ய முடியும்” - விஜயகாந்துக்காக தயாராக இருக்கும் ராகவா லாரன்ஸ்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
Ukraine Putin Trump: புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Old pension scheme : ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
Ukraine Putin Trump: புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Old pension scheme : ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
Embed widget