RRR : ஒரு பக்கம் குவியும் விருதுகள்.. மறுபக்கம் ஏமாற்றம்... ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்படாத ஆர்ஆர்ஆர்..
நியூயார்க் பிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதை வென்ற எஸ்.எஸ்.ராஜமௌலி ஒருபுறம் இருக்க ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படவில்லை என்ற ஆதங்கத்தில் இருக்கிறார் எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத்
சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சாதனை படைத்த திரைப்படம் ஆர்ஆர்ஆர். எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து கடந்த மார்ச் மாதம் வெளியான இப்படம் உலகளவில் 1,100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. சமீபத்தில் ஜாப்பனீஸ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஜப்பானில் வெளியிடப்பட்ட இப்படம் அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த இயக்குநருக்கான விருது :
இப்படி மகத்தான சாதனை படைத்த ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு நியூயார்க் பிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதை வென்ற எஸ்.எஸ்.ராஜமௌலி. இந்த விருதுக்காக நாமினேட் செய்யப்பட்ட மற்ற இயக்குனர்களான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், டாரன் அரோனோஃப்ஸ்கி, சாரா பாலி மற்றும் ஜினா பிரின்ஸ்-பிளைத்வுட் ஆகியோர் மத்தியில் ராஜமௌலியின் வெற்றி பலரை ஆச்சரியப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருது மூலம் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளது ஆர்ஆர்ஆர் திரைப்படம்.
. @SSRajamouli wins the prestigious New York Film Critics Circle Award for the Best Director! 🤩⚡️ @NYFCC
— RRR Movie (@RRRMovie) December 3, 2022
Words can't do justice to describe how happy and proud we are...
Our heartfelt thanks to the jury for recognising #RRRMovie. pic.twitter.com/zQmen3sz51
எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் ஏமாற்றம் :
மறுபக்கம் ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாத ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் எழுத்தாளர் மற்றும் ராஜமௌலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத் அவரின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 2022ம் ஆண்டு முழுவதும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை கொண்டாடி இப்படம் ஆஸ்கார் விருதை நிச்சயமாக வெல்லும் என பல உரையாடல்களில் ஊக்குவிக்க மிகுந்த நம்பிக்கையுடன் இருந்த எனக்கு லாஸ்ட் ஃபிலிம் ஷோ (செல்லோ ஷோ) ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டது மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது என மிகுந்த மனவேதனையுடன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார் ஆர்ஆர்ஆர் படத்தின் எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத்.
EXCLUSIVE: “Yes, I was disappointed, but I can't express my disappointment,” says #VijayendraPrasad on #RRR not the being India’s official entry to Oscars. The writer is however confident to bag nominations in key categories. #SSRajamouli #JrNTR #RamCharanhttps://t.co/F38WTpk5aw
— Himesh (@HimeshMankad) December 3, 2022