Rajamouli Anupam Kher Meet: காஷ்மீர் பைல்ஸ் நடிகருக்கு ராஜமெளலி கொடுத்த தடல்புடல் விருந்து - வீடியோ!
காஷ்மீர் டைரிஸ் பட நடிகருக்கு இயக்குநர் ராஜமெளலி மதிய உணவு விருந்து அளித்துள்ளார்
காஷ்மீர் டைரிஸ் பட நடிகருக்கு இயக்குநர் ராஜமெளலி மதிய உணவு விருந்து அளித்துள்ளார்
பாலிவுட்டில் 500 படங்களுக்கும் மேல் நடித்து பிரபலமானவர் நடிகர் அனுபம் கெர்.இவரது நடிப்பில் வெளியான காஷ்மீர் டைரிஸ் திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றதோடு சர்ச்சைக்கும் உள்ளானது. இவருக்கு ‘பாகுபலி’ படத்தை இயக்கியதின் மூலம் உலக அளவில் மிகபெரிய கவனத்தை பெற்ற இயக்குநர் ராஜமெளலி ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் மதிய உணவு விருந்து அளித்துள்ளார். உணவை சாப்பிட்ட அனுபம் மரியாதை நிமித்தமாக ராஜமெளலிக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்து அது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
View this post on Instagram
அந்த பதிவிட்டு இருக்கும் பதிவில், “ எனதன்பு ராஜமெளலி.. உங்களின் அன்புக்கும், ஹைதராபாத்தில் உங்கள் வீட்டில் நீங்கள் கொடுத்த அருமையான மதிய உணவுக்கும் நன்றி. உங்களது சொந்த வீட்டில் உங்களுக்கு இந்த சால்வையை அணிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
உங்களின் எளிமையும் மனித நேயமும் என்னை கவர்ந்தது. நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். உங்களிடம் இருந்தும், உங்களது மனைவியிடம் இருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன்.” என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த வீடியோவில் அனுபம் “இல்லையென்றால் என்னை எப்படி நீங்கள் அதிகம் நினைவில் வைத்திருப்பீர்கள் என்று சொல்ல ராஜமெளலின் மனைவி உங்களை நாங்கள் எப்படி மறப்போம் என்று கூறுகிறார்.
View this post on Instagram
முன்னதாக நெட்பிளிக்ஸ், எஸ்.எஸ்.ராஜமெளலி மற்றும் தி கிரே மேன் இயக்குநர்களான ரூசோ சகோதரர்கள் இணைந்து பேசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அப்போது ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை இந்தி தவிர பிற மொழிகளில் ஏன் ரிலீஸ் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பி, நெட்பிளிக்ஸ் நிறுவனம் மீது தான் கோபமாக இருப்பதாக பேசினார்.