மேலும் அறிய

Sridevi: பாயாசமும் ஐஸ் க்ரீமும் சாப்பிடுங்க.. நீங்க என் கூட இருந்திருக்கணும்.. ஸ்ரீதேவி மகள் உருக்கம்..

“நான் உங்கள் பிறந்தநாளில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கிறேன்.  முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நீங்கள் இங்கு என்னுடன் இப்படி இருந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன் அம்மா” என ஜான்வி கபூர் பதிவிட்டுள்ளார்

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இன்று 60ஆவது பிறந்தநாள். கோலிவுட் தொடங்கி தென்னிந்தியா முழுவதும் கோலோச்சி, பின் பாலிவுட் சென்று சூப்பர் ஸ்டார் நடிகையாக உருவெடுத்த ஸ்ரீதேவியை இந்திய சினிமா உலகில் உள்ளவர்களால் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது!

 இந்தியா முழுதும் கொண்டாடப்பட்ட நடிகை

Sridevi: பாயாசமும் ஐஸ் க்ரீமும் சாப்பிடுங்க.. நீங்க என் கூட இருந்திருக்கணும்.. ஸ்ரீதேவி மகள் உருக்கம்..

2018-ஆம் ஆண்டு தன் மூத்த மகள் ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகவிருக்கும் நேரத்தில் நடிகை ஸ்ரீதேவி திடீரென துபாயில் உயிரிழந்தது ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும் மாபெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்திய சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடித் தீர்க்கப்பட்ட ஸ்ரீதேவி, தன் 54ஆவது வயதில் பாத்டப்பில் மூழ்கி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

இந்த சம்பவம் திரையுலகினர், ரசிகர்கள் என அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், ஸ்ரீதேவியின் இறப்பை போனி கபூரின் சகோதரர் சஞ்சய் கபூர் உறுதி செய்தார்.  சில நாள்களில் துபாயில் இருந்து ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டு வரப்பட்டு அங்கு அவருக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. அவரது அஸ்தி இராமேஸ்வரத்தில் கரைக்கப்பட்டது.

மீளா துயர்...

Sridevi: பாயாசமும் ஐஸ் க்ரீமும் சாப்பிடுங்க.. நீங்க என் கூட இருந்திருக்கணும்.. ஸ்ரீதேவி மகள் உருக்கம்..

இந்நிலையில், ஸ்ரீதேவியின் இறப்பால் அவரது கணவர் போனி கபூர், இரு மகள்களான ஜான்வி கபூர், குஷி கபூர் என மொத்த குடும்பத்தினரும் மனமுடைந்து மீளா துயரில் ஆழ்ந்தனர். ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பிறகு சில மாதங்கள் கழித்து ஜான்வி கபூர் தடக் இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். 

இன்று வரை ஸ்ரீதேவின் திடீர் மறைவு தந்தை துயரில் இருந்து விடுபடாத அவரது குடும்பத்தினர் தொடர்ந்து அவரை சமூக வலைதளங்களில் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஸ்ரீதேவியின் மகளும், பிரபல நடிகையுமான ஜான்வி கபூர் உருக்கமான பதிவினைப் பகிர்ந்துள்ளார்.

ஜான்வி பதிவு

 “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா. ஷூட்டிங் ஸ்பாட்டில் உங்கள் அம்மாவுடன் நீங்கள் இருக்கும் புகைப்படம் இது. உங்களுக்கு மிகவும் பிடித்த இடங்களில் இதுவும் ஒன்று என எனக்குத் தெரியும். 

நான் இப்போது உங்கள் பிறந்தநாளில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கிறேன்.  முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நீங்கள் இங்கு என்னுடன் இப்படி இருந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன். நான் கஷ்டப்பட்டு எல்லாவற்றையும் சரியாக செய்கிறேனா, இல்லையா என நீங்கள் இங்கே இருந்திருந்தால் சொல்லி இருப்பீர்கள்.

என்னைப் பார்த்து நீங்கள் பெருமையாக உணர்ந்திருப்பதை பார்த்திருப்பேன். நாங்கள் முயற்சிப்பதைப் பார்த்து நீங்கள் மகிழ்ச்சியாக உணர்வீர்கள் எனத் தெரியும். நாள் தோறும் உங்களை நான் விரும்புகிறேன். இந்த பிரபஞ்சத்திலேயே நீங்கள் தான் ஸ்பெஷலான பெண்.

நீங்கள் எங்களுடன் தான் இருக்கிறீர்கள் என எனக்குத் தெரியும். நாங்கள் எங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு நீங்கள் தான் காரணம். நீங்கள் நிறைய பாயாசம், ஐஸ்க்ரீம், கேரமல் கஸ்டர்ட் எல்லாம் இன்று சாப்பிட்டிருப்பீர்கள் என நம்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

கணவர் போனி கபூர் பதிவு

இதேபோல் ஸ்ரீதேவியின் கணவர்,  தயாரிப்பாளர் போனி கபூர் பகிர்ந்துள்ள பதிவில், “நான் என்றும் ஸ்ரீதேவியின் மிகப்பெரிய ரசிகர். நான் அவரை சாகும் வரை நேசிப்பேன். நான் இன்றும் அவரது பாடல்களைக் கேட்கிறேன். அவரைப் போல் நேச்சுரலாக எந்த ஒரு நடிகையும் இல்லை. எந்த ஒரு பாத்திரத்தையும் சிறப்பாக அவரால் செய்ய முடியும்” எனப் பதிவிட்டுள்ளார்.

இன்று கூகுள் நிறுவனம் மறைந்த ஸ்ரீதேவியை நினைவுகூறும் வகையில் டூடுள் பகிர்ந்து சிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget