மேலும் அறிய

Ana Obregón: இறந்த மகனின் விந்தணுவை கொண்டு குழந்தை பெற்றெடுத்த நடிகை.. திரையுலகில் பரபரப்பு

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதாக கூறப்பட்ட விவகாரத்தில் அனைவரும் அதிர்ச்சியடையும் வகையில் ஸ்பெயின் நடிகை அனா ஒப்ரகன் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். 

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதாக கூறப்பட்ட விவகாரத்தில் அனைவரும் அதிர்ச்சியடையும் வகையில் ஸ்பெயின் நடிகை அனா ஒப்ரகன் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். 

பொதுவாக திரையுலகை பொறுத்தவரை பிரபலங்கள் குழந்தை தத்தெடுப்பு என்பது மிகச்சாதாரணமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது சில நேரங்களில் சட்டசிக்கலை ஏற்படுத்தினாலும் திருமணத்தில் விருப்பமில்லாத, அல்லது தனக்கு ஒரு துணை தேவை என்னும் பட்சத்தில் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார்கள். இது இந்திய திரையுலகம் மட்டுமல்லாது ஹாலிவுட் திரையுலகம் வரை இயல்பான ஒன்றாகவே உள்ளது. அந்த வகையில் பிரபல ஸ்பெயின் நடிகை அனா ஒப்ரகன் குழந்தை ஒன்றை தத்தெடுத்த சம்பவம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. 

இவர் சமீபத்தில் அனா சாண்ட்ரா என்ற பிறந்து ஒரு வாரமான குழந்தையை தத்தெடுத்தார். இந்த குழந்தை புளோரிடா மாகாணத்தின் மியாமியில் வசிக்கும் கியூபா நாட்டு பெண்ணுக்கு பிறந்த குழந்தையாகும். வாடகைத் தாயான அவருக்கு பிறந்த குழந்தையை  அனா ஒப்ரகன் தத்தெடுத்தது பாராட்டை பெற்ற நிலையில் அதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார். 

காரணம் இந்த குழந்தை தனது இறந்த மகனின் விந்தணு மூலம் உருவானது என அனா ஒப்ரகன் கூறியுள்ளார். பிரபல பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு குழந்தையுடன் போஸ் கொடுத்த அவர், “இது என் மகள் அல்ல.. பேத்தி” என விளக்கமளித்தார். 

68 வயதான அனா ஒப்ரகனின் மகன் அலெஸ் லெகியோ தனது 27 வயதில் கடந்த 2020 ஆம் ஆண்டு புற்றுநோயால்  மரணமடைந்தார். அவர் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த உரையாடலின் போது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற ஆசையை தெரிவித்துள்ளார். அலெஸ் லெக்வியோ இறப்பதற்கு முன், அவரது விந்தணுவின் மாதிரி உறைந்து நியூயார்க்கில் சேமிக்கப்பட்டது. இதற்கிடையில் மகனின் ஆசையை வெளிப்படுத்த, அதனை அனா நிறைவேற்றியுள்ளார். இதற்காக 3 ஆண்டுகளாக விந்தணுவை பாதுகாத்து வந்துள்ளார். 

ஸ்பெயினை பொறுத்தவரை வாடகைத்தாய் விவகாரம் சட்டவிரோதமானது என்றாலும், வெளிநாட்டில் பிறந்த குழந்தையைத் தத்தெடுப்பது சட்டபூர்வமானது என்பதால் அமெரிக்காவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதை அனா தத்தெடுத்துள்ளார். மேலும் ஸ்பெயினில் இறந்த மனிதனின் விந்து, கருவூட்டலுக்குத் தொடர்ந்து பயன்படுத்தப்படும்போது அது அவர் இறந்த  12 மாதங்களுக்குள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. 

அதேசமயம் அனாவின் இந்த செயல் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. ஸ்பெயின் அமைச்சர் ஐரீன் மான்டெரோ இந்த சம்பவம் "பெண்களுக்கு எதிரான வன்முறையின் ஒரு வடிவம்" என்று தெரிவித்துள்ளார். மறுபுறம் இறந்த மகனின் கடைசி ஆசையை ஒரு தாயால் எப்படி நிறைவேற்றாமல் இருக்க முடியும் எனவும், இதில் பெற்றோருக்கு மட்டுமே முடிவு எடுக்க உரிமை உண்டு  எனவும் அனா ஒப்ரகனுக்கு ஆதரவு குரலும் எழுந்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
AI Powered E3 Trion E-Scooter: நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Embed widget