Arthi Kumar: தமிழ் திரையுலகில் சோகம்.. சத்யராஜ் படங்களை இயக்கிய இயக்குநர் மரணம்
கடந்த ஜனவரி மாதத்தில் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியல் ஆலிவர், பாடகி பவதாரிணி, இயக்குநர் வினு உள்ளிட்டோர் உயிரிழந்தனர்.
தமிழ் சினிமாவைச் சேர்ந்த இயக்குநர் ஆர்த்தி குமார் உடல்நலக்குறைவால் உயிரிழந்த தகவல் ரசிகர்களிடையே சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
சினிமாவையும் மக்களையும் என்றைக்கும் பிரித்து பார்க்க முடியாது. அந்த பிரபலங்களை தங்களில் ஒருவராக நினைக்கும் வழக்கம் சிவாஜி, எம்ஜிஆர் காலம் தொட்டே உள்ளது. அவர்களின் குடும்பத்தில் சுக, துக்க நிகழ்வுகளை தங்கள் குடும்பத்தில் நிகழ்ந்ததாகவே எண்ணி வருத்தப்படுபவர்கள் ஏராளம். இப்படியான நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்தாண்டு மிக முக்கியமான பிரபலங்கள் மரணமடைந்த நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியல் ஆலிவர், பாடகி பவதாரிணி, இயக்குநர் வினு உள்ளிட்டோர் உயிரிழந்தனர்.
இப்படியான நிலையில் தமிழ் சினிமாவுக்கு மேலும் கடந்த 2004 ஆம் ஆண்டு சத்யராஜ், மறைந்த நடிகை பிரதியுஷா, வடிவேலு, இளவரசு, மணிவண்ணன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் “சவுண்ட் பார்ட்டி’. தேவா இசையமைத்த இந்த படத்தை ஆர்த்தி குமார் இயக்கியிருந்தார். இந்த படத்தின் காமெடி காட்சிகளை அவர் தான் எழுதியிருந்தார். குறிப்பாக வடிவேலுவின் வசனங்களும், காமெடி காட்சிகளும் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பிரபலமானது.
தொடர்ந்து சத்யராஜ் மற்றும் பிரேமாவை வைத்து “அழகேசன்” என்ற படத்தையும் எடுத்திருந்தார். மேலும் ஞான ராஜசேகரன் இயக்கிய ' பெரியார்’ பற்றிய வரலாற்று படத்தில் ராஜாஜியாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். இந்நிலையில் இயக்குநர் ஆர்த்தி குமார் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இவரது சொந்த ஊர் நெல்லை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இயக்குநர் ஆர்த்தி குமாரின் இயற்பெயர் சுரேஷ்குமார் ஆகும்.
இவர் நேற்று முன்தினம் திருநெல்வேலி மாவட்டம் ஹைகிரவுண்ட் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி தமிழ் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் ஆர்த்தி குமார் மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Tamilaga Vettri Kazhagam: விஜய் கட்சி பற்றி என்ன நினைக்கிறீங்க? - ரஜினி சொன்னது என்ன தெரியுமா?