வெற்றிமாறனுக்கு அடுத்து சூரியை இயக்கும் அமீர்?
இயக்குநர் அமீர் இயக்கத்தில் சூரி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நகைச்சுவை நடிகராக கோலிவுட்டில் பயணப்படுபவர் நடிகர் சூரி. தற்போது கோலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகராகவும் இருக்கிறார். இவர் ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துவிட்டார். அதேசமயம் சூரியின் நகைச்சுவை பெரிதாக ரசிக்கும்படி இல்லை என்ற விமர்சனமும் வைக்கப்பட்டுவருகிறது. இருப்பினும் சூரியின் பயணம் தற்போதுவரை நிற்கவில்லை.
இந்த சூழலில் சூரி இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். விடுதலை என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதையிலிருந்து உருவாகிவருகிறது.
வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் ஹீரோவாக நடிக்கும் சூரியுடன், விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.
சூரி ஹீரோவாக கமிட்டானாலும் சிவகார்த்திகேயனின் ‘டான்’, கார்த்தியின் ‘விருமன்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்டப் படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்துவருகிறார்.
இந்நிலையில் இயக்குநர் பாலாவின் நண்பரும், உதவி இயக்குநரமான அமீர் இயக்கத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமீர் கடைசியாக ஜெயம் ரவி, நீத்து சந்திரா நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான ஆதிபகவான் படத்தை இயக்கியிருந்தார். ஆனால் அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை.
அதேசமயம், தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய இயக்குநர்கள் வரிசையில் பாரதிராஜாவுக்கு பிறகு அமீருக்கும் இடமுண்டு. பருத்திவீரன் என்ற படம் வெளியான பிறகுதான் கோலிவுட்டில் கிராமங்களை பற்றிய படம் அதிகளவில் வெளிவர ஆரம்பித்தது. எனவே அமீரின் இயக்கத்தில் வெளிவரப் போகும் திரைப்படம் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் தங்களுக்குள் அதிகப்படுத்தியிருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Govt Holiday Jan 17: ஜனவரி 17-ஆம் தேதி அரசு விடுமுறை.. ஏன் தெரியுமா? தமிழ்நாடு அரசின் அறிவிப்பு குறித்து முழு விவரம் இதோ..