வெற்றிமாறனுக்கு தோல்வி பயத்தை காட்டிய 'விடுதலை 2'! ஒட்டு மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
சூரி - விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'விடுதலை 2' படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
விடுதலை 2:
ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மாதம் திரைக்கு வந்த படம் 'விடுதலை 2'. முதல் பாகம் கொடுத்த வரவேற்பும், வசூலும் 'விடுதலை 2' படத்தின் மீனாதா ஆர்வத்தை தூண்டியது.
ஆனால் இந்த எதிர்பார்ப்பை தகர்க்கும் விதத்தில் தான் இயக்குனர் வெற்றிமாறன் 'விடுதலை 2' படத்தை இயக்கி இருந்தார். இதுவரை வெற்றிகளை மட்டுமே கொடுத்து வந்த இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறனுக்கு, 'விடுதலை 2' திரைப்படம் தோல்வி பயத்தை காட்டியுள்ளது.
வெற்றிமாறன்:
இந்தப் படத்தில் நடித்த விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ், சேத்தன் ஆகியோர் நடிப்பில் தங்களுடைய முழு ஆளுமையை வெளிப்படுத்தி இருந்தாலும்... வெற்றிமாறன் இயக்கம் எங்கோ மிஸ் ஆவது தான் இந்த படத்தின் தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது. சூரியை முன்னிறுத்தி இவர் இயக்கி இருந்த, முதல் பாகத்தை ஒப்பிடும் போது வாத்தியாரை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட 'விடுதலை 2' ரசிகர்களை பெரிதாக கவரவில்லை.
இதுவரை அதிகம் அரசியல் பேசிடாத வெற்றிமாறன் இந்த படத்தில், கம்யூனிச காட்சிகளை விட வசனத்தை வைத்தே ரசிகர்களுக்கு போர் அடிக்க வைத்து விட்டார். டிசம்பர் 20 ஆம் தேதி வெளியான 'விடுதலை படத்தின் 2ஆம் பாகம், திரைக்கு வந்து 11 நாட்கள் கடந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ஒட்டு மொத்த வசூல் வெளியாகியுள்ளது.
விடுதலை 2 ஒட்டுமொத்த வசூல்:
அதன்படி, உலகம் முழுவதும் வெளியான விடுதலை 2 மொத்தமாக ரூ.56 கோடி வரை தான் வசூல் செய்துள்ளதாம். விடுதலை 2 படத்தின் பட்ஜெட் 65 கோடி என கூறப்படும் நிலையில், ரூ.56 கோடி மட்டுமே இப்படம் வசூல் செய்துள்ளதால், சுமார் 9 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.