(Source: ECI/ABP News/ABP Majha)
Soorarai Pottru Awards: ''ஜெயிச்சிட்டோம் மாறா..'' சூரரைப்போற்று தேசிய விருதுகளை கேக் வெட்டி கொண்டாடிய சுதாகொங்கரா..!
சூரரைப்போற்று படத்திற்கு 5 பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வெற்றியை சுதாகொங்கரா கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
சூரரைப்போற்று படத்திற்கு 5 பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வெற்றியை சுதாகொங்கரா கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
நாம ஜெயிச்சுட்டோம் மாறா!#SooraraiPottru @Suriya_offl @gvprakash @Aparnabala2 @rajsekarpandian @2D_ENTPVTLTD @nikethbommi @jacki_art @editorsuriya @PoornimaRamasw1 @deepakbhojraj @valentino_suren @gopiprasannaa pic.twitter.com/PxQe6chkoY
— Sudha Kongara (@Sudha_Kongara) July 22, 2022
68வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. இதில் தமிழில் வெளியான திரைப்படங்கள் ஏராளமான விருதுகளை குவித்துள்ளது. குறிப்பாக, இயக்குநர் சுதாகொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ‘சூரரைப்போற்று’ திரைப்படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருது, சிறந்த நடிகருக்கான விருது, சிறந்த நடிகைக்கான விருது சிறந்த பின்னணி இசைக்கான விருது சிறந்த திரைக்கதைக்கான விருது என 5 விருதுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக, சுதா கொங்கரா கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார்.
மனமார்ந்த நன்றி!
— Suriya Sivakumar (@Suriya_offl) July 22, 2022
Overwhelmed!! #SooraraiPottru pic.twitter.com/fxGycj7h4Y
விருது விபரங்கள்
சிறந்த வசனம் - இயக்குநர் மடோனா அஸ்வின் ( மண்டேலா)
சிறந்த அறிமுக இயக்குநர் - இயக்குநர் மடோனா அஸ்வின் ( மண்டேலா)
சிறந்த படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத் ( சிவ ரஞ்சனியும் சில பெண்களும்)
சிறந்த தமிழ் படம் - சிவரஞ்சனியும் சில பெண்களும் ( இயக்கம் : இயக்குனர் வசந்த்)
சிறந்த துணை நடிகை - லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி (சிவரஞ்சனியும் சில பெண்களும்)
சிறந்த எடிட்டிஙல் – ஸ்ரீகர் பிரசாத் ( சிவரஞ்சனியும் சில பெண்களும்)
2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை திரைப்பட வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கான பட்டியலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்தியாவில் திரைப்படம் எடுக்க உகந்த நகரமாக மத்தியப்பிரதேசம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ‛சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ அன்றே கணித்து பாராட்டிய நடிகர் சூர்யா!
மேலும் படிக்க : Mandela Movie Awards: மண்டேலா திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநர் விருதுபெறும் மடோன் அஷ்வின்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்