Sonam Kapoor Anand Baby: ஆண் குழந்தைக்குத் தாயான நடிகை சோனம் கபூர்... திரைத்துறையினர், ரசிகர்கள் வாழ்த்து!
சோனம் கபூர் கடந்த மார்ச் மாதம் தான் கருவுற்றிருப்பதாக இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்திருந்தார்.
பாலிவுட்டின் பிரபல நடிகை சோனம் கபூருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அனில் கபூர் மகள், தனுஷ் பட நடிகை
பாலிவுட்டின் பிரபல நடிகர் அனில்கபூர் - சுனிதா கபூர் தம்பதியின் மகள் பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர். இவர் பாலிவுட்டில் கடந்த 2007ஆம் ஆண்டு சஞ்சய் லீலா பன்சாலியின் ’சாவரியா’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து டெல்லி 6, ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ், பாக் மில்கா பாக், நீர்ஜா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவர் 2013ஆம் ஆண்டு தனுஷூடன் நடித்த ரான்ஜனா படம் தமிழில் அம்பிகாபதி எனும் பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
தொழிலதிபருடன் திருமணம்
இவர் கடந்த 2018ஆம் ஆண்டு தொழிலதிபர் ஆனந்த் அஹூஜா என்பவரைத் திருமணம் செய்துகொண்டு லண்டனில் வசித்து வருகிறார்.
View this post on Instagram
திருமணத்துக்குப் பிறகும் சஞ்சு, ஜோயா ஃபேக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்த சோனம் கபூர் கடந்த மார்ச் மாதம் தான் கருவுற்றிருப்பதாக இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்திருந்தார்.
ஆண் குழந்தை
இந்நிலையில், தங்களுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாக சோனம் தன் இன்ஸ்டா பக்கத்தில் முன்னதாகப் பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சோனம் கபூர் - ஆனந்த் அஹூஜா தம்பதியினரை பாலிவுட் திரைத்துறையினரும் அவரது ரசிகர்களும் வாழ்த்து மழையில் நனையவைத்து வருகின்றனர்.
View this post on Instagram
சோனம் கபூர் தன் கர்ப்ப காலத்தில் கலந்து கொண்ட காஃபி வித் கரண் நிகழ்ச்சி கடந்த வாரம் வெளியானது குறிப்பிடத்தக்கது.