‛கோடி அருவி கொட்டுதே...’ மழையை ரசிக்க வைக்கும் பாடல்களின் ப்ளே லிஸ்ட் இதோ !
தமிழ் சினிமாவில் அமைந்துள்ள சிறப்பான மழை பாடல்கள் என்னென்ன?
'கோடி அருவி கொட்டுதே' என்ற வரிகளுக்கு ஏற்ப சென்னையில் கோடை காலத்தில் இன்று மழை நீண்ட நாட்களுக்கு பிறகு வெளுத்து வாங்கியுள்ளது. வெயில் வெப்பத்தில் வாடிய சென்னை மக்கள் தற்போது மழையின் அழகை ரசித்து வருகின்றனர். இந்தச் சூழலில் தமிழ் சினிமாவில் அமைந்துள்ள சிறப்பான மழை பாடல்கள் என்னென்ன?
1. தகிட ததிமி:
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சலங்கை ஒளி திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இப்பாடலை எஸ்பிபி பாடியிருப்பார். இதற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருப்பார். இந்தப் பாடலுக்கு மழையில் ஒரு கிணற்றின் மீது நின்று கமல்ஹாசன் நடனம் ஆடியிருப்பார்.
"மனிதன் தினமும் அலையில்
அலையும் குமுளி தெரியும்
தெரிந்தும் மனமே கலங்காதிரு
நீ மனிதன் தினமும் அலையில்
அலையும் குமுளி தெரியும்
தெரிந்தும் மனமே லாலா லாலா
தாளம் இங்கு தப்பவில்லை
யார் மீதும் தப்பு இல்லை
கால்கள் போன பாதை
எந்தன் எல்லை..."
2. ஏய் நிலவே:
அஜித், ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் முகவரி. இந்தப் படத்தில் இப்பாடலை உன்னி மேனன் பாடியிருப்பார். இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்திருப்பார். பாடலின் வரிகள் மற்றும் அஜித் மழையில் நனைந்து கொண்டு பாடும் காட்சி மிகவும் அழகாக அமைந்திருக்கும்.
"நினைந்து நினைந்து
நெஞ்சம் வலி கொண்டதே
என் நிழலில் இருந்தும் ரத்தம்
கசிகின்றதே ஒரு சொல் ஒரு
சொல் ஒரு சொல் சொன்னால்
உயிரே ஊறிவிடும் அடியே
அடியே முடியாதென்றால்
இதயம் கீறிவிடும்...."
3. ஓஹோ மேகம் வந்ததோ:
ரேவதி மோகன் நடிப்பில் வெளியான திரைப்படம் மௌனராகம். இந்தப் படத்தில் பாடல்கள் அனைத்தும் நல்ல ஹிட் அடித்திருக்கும். அப்படி ஹிட் அடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருப்பார்.
"கால்கள் எங்கேயும்
ஓடலாம் காதல் இல்லாமல்
வாழலாம் வண்ண மின்னல்களாய்
நின்றாடலாம் வாழ்வில் சங்கீதம்
பாடலாம் நாம் இந்நாளிலே
சிட்டாக மாறலாம்..."
4. மழையே மழையே:
ஈரம் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இசையமைப்பாளர் தமன் இசையில் இந்தப் பாடலை பாடகர் ரஞ்சித் பாடியிருப்பார். சமீப காலங்களில் மழை குறித்து வந்த சிறப்பான பாடல்களில் இதுவும் ஒன்று.
"விழியே விழியே
பேசும் விழியே ஒரு
பாா்வைப் பாா்த்தாய்
மழையே மழையே
நெஞ்சில் மழையே
தனியேத்தனியே
வாழ்ந்தேன் தனியே
நான் வந்தேன் மேலே
இனிமே இனிமே நீதான்
துணையே...."
5. அடடா மழை டா:
கார்த்திக், தமன்னா நடிப்பில் வெளியான பையா திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. யுவன்சங்கர் ராஜா இசையில் ராகுல் நம்பியார் மற்றும் இப்பாடலை பாடியிருப்பார்கள்.
"பாட்டு பாட்டு பாடாத பாட்டு
மழை தான் பாடுது கேட்காத பாட்டு
உன்னை என்னை சோ்த்து வச்ச
மழைக்கொரு சலாம் போடு
என்னை கொஞ்சம் காணலயே
உனக்குள்ள தேடி பாரு
மந்திரம் போல இருக்கு
புது தந்திரம் போல இருக்கு
பம்பரம் போல எனக்கு
தல மத்தியில் சுத்துது கிறுக்கு..."
இவை தவிர உயிரே உயிரே, நன்னாரே, துளி துளி போன்ற பல மழைப் பாடல்கள் தமிழ் சினிமாவில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மழை விழுந்து மனசு நெறஞ்சிருக்கா... ஜில்லுன்னு இந்த பாட்டை கேளுங்க... ஜம்முனு தூங்குங்க!