மழை விழுந்து மனசு நெறஞ்சிருக்கா... ஜில்லுன்னு இந்த பாட்டை கேளுங்க... ஜம்முனு தூங்குங்க!
தமிழ் சினிமாவில் வெளியான சிறப்பான மழை பாடல்கள் என்னென்ன?
நீள மலைச்சாரல் என்ற ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் வரிகளை போல் எப்போதும் மழை என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. மழை காலம் வந்துவிட்டால் கையில் ஒரு கப் தேநீர் உடன் பாடல் கேட்பது அவ்வளவு ஆனந்தமாக இருக்கும். அந்தவகையில் தமிழ் திரைப்படங்களில் மழை காட்சிகளுடன் அமைந்த சிறப்பான பாடல்கள் என்னென்ன?
1. சின்ன சின்ன மழை துளிகள்:
அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான என் சுவாச காற்றே என்ற திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலை எம்.ஜி.ஶ்ரீகுமார் பாடியிருப்பார். ஏ.ஆர்.ரஹ்மான் பாடலுக்கு இசையமைத்திருப்பார்.
"அந்த இயற்கை
அன்னை படைத்த ஒரு
பெரிய ஷவர் இது அட
இந்த வயது கழிந்தால்
பிறகெங்கு நனைவது
இவள் கன்னியென்பதை
இந்த மழை கண்டறிந்து
சொல்லியது..."
2. வான் மேகம் பூ:
கமல்ஹாசன், ரேவதி நடிப்பில் வெளியான புன்னகை மன்னம் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலை சித்ரா பாடியிருப்பார். இளையராஜாவின் இசை பாடலுக்கு மேலும் வலு சேர்த்திருக்கும்.
"வானம் முத்துக்கள்
சிந்தி வாழ்க என்றது காதல்
வென்றது மேகம் வந்தது
பூக்கள் சிந்துது ஆளுமில்லை
சேர்த்தெடுக்க நூலுமில்லை
கோர்த்தெடுக்க
வான் மேகம்
பூ பூவாய் தூவும் தேகம்
என்னவாகும் இன்பமாக
நோகும்..."
3. மேகம் கருக்குது:
விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. தேவாவின் இசையில் பாடகி ஹரிணி இந்தப் பாடலை பாடியிருப்பார். இந்தப் பாடலில் ஜோதிகாவின் நடிப்பும் சிறப்பாக அமைந்திருக்கும்.
"காற்றை போல்
எனக்கு கூட சிறகொன்றும்
கிடையாது தடைமீறி செல்லும்
போது சிறை செய்ய முடியாது
இளமையின் சின்னம்
இளம்பட்டு வண்ணம் இன்னும்
இன்னும் வளா்த்துக்கொள்வேன்
இருபத்தி ஒன்னு வயதுக்கு மேலே
காலத்தை நிறுத்தி வைப்பேன் ஹோய்.."
4. எவனோ ஒருவன்:
மாதவன், ஷாலினி நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் அடித்த திரைப்படம் அலைபாயுதே. இந்தப் படத்தில் ஸ்வர்ணலதா குரலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்பாடல் மிகவும் சிறப்பான ஒன்றாக அமைந்திருக்கும். இப்பாடலை மணிரத்னம் சிறப்பாக காட்சி படுத்தியிருப்பார்.
"உறக்கம் இல்லா
முன்னிரவில் என் உள்மனதில்
ஒரு மாறுதலா உறக்கம் இல்லா
முன்னிரவில் என் உள்மனதில்
ஒரு மாறுதலா
இரக்கம் இல்லா
இரவுகளில் இது எவனோ
அனுப்பும் ஆறுதலா...."
5. நீ வரும்போது:
ஸ்ரேயா, ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் மழை. இந்தப் படத்தில் தேவிஶ்ரீபிரசாத் இசையில் சின்னக் குயில் சித்ரா குரலில் அமைந்த சிறப்பான மழை பாடல் இது. இந்தப் பாடலின் வரிகள் மற்றும் ஸ்ரேயாவின் மழை நடனம் கூடுதல் சிறப்பாக அமைந்திருக்கும்.
"முத்து மழையே
முத்து மழையே மூக்கின்
மேலே மூக்குத்தியாகு
வைர மழையே வைர மழையே .
காதில் வந்து தோடுகள் போடு
உச்சி விழுந்த
நெற்றியில் ஆடி நெற்றி
கடந்த நீல்வழி ஓடி
செண்பக மார்பில் சடுகுடு
பாடி அனுவனுவாகி முனு
முனு செய்தாயே..."
இவை தவிர நன்னாரே, என்னை கொஞ்ச கொஞ்ச, மழையே மழையே, துளி துளி மழையாய், அடடா மழைடா போன்ற பல மழை சார்ந்த பாடல்கள் தமிழ் சினிமாவில் உள்ளன. அவற்றை அடுக்க ஒரு நாள் போதாது.
மேலும் படிக்க:கவிஞர்கள் மறைவதில்லை... மலர்கிறார்கள்... இது நா.முத்துக்குமாரின் இரவை இனிதாக்கும் வரிகளின் வாய்க்கால்!