SJ Suryah : ரொம்ப அழகா இருக்கீங்க.. கல்யாணியை பார்த்து வழிந்த எஸ்.ஜே.சூர்யா.. மாநாடு ஸ்டைலில் கலாய்த்த பிரேம்ஜி..!
பிரபல நடிகரான எஸ்.ஜே. சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷனை குறித்து பதிவிட்ட ட்விட்டர் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகரான எஸ்.ஜே. சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷனை குறித்து பதிவிட்ட ட்விட்டர் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்தப்பதிவில்,தான் கல்யாணி பிரியதர்ஷினியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட அவர் , “ இந்தப் புகைப்படத்தை ட்விட்டர் பகிர்வதில் எனக்கு மகிழ்ச்சி. நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்.. உங்கள் உடலை நீங்கள் கட்டுக்கோப்பாக வைத்திருக்க அதிகமாக உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன். பாலிவுட் நடிகர்களோடு பேன் இந்தியா படங்களில் நடிக்க தயாராக இருங்கள். வாழ்த்துகள் மாநாடு லக்கி சார்ம்” என்று பதிவிட்டார். இந்த ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்த வெங்கட் பிரபுவின் தம்பியும் நடிகருமான பிரேம்ஜி மாநாடு படத்தில் வந்து மிகவும் பிரபலமான தலைவரே தலைவரே என்ற டயாலாக்கை பகிர்ந்து கலாய்த்திருக்கிறார். இந்தப்பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Hello @kalyanipriyan happy sharing this pic in tweeter 😍😍😍U look great I think U worked out a lot and made urself fit and ready for pan Indian movies 👍👍👍par with Bollywood stars 💐💐💐all the very best MAANAADU LUCKY CHARM pic.twitter.com/ADxonY3HCJ
— S J Suryah (@iam_SJSuryah) March 20, 2022
🤣🤣🤣🤣🤣 https://t.co/uZl97rU5BD
— S J Suryah (@iam_SJSuryah) March 20, 2022
அண்மையில் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆனது. இந்தப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பெரிய அளவில் பாரட்டப்பட்டது. இவரின் நடிப்பில் அடுத்ததாக டான், பொம்மை, இறவாகாலம் உள்ளிட்ட பல படங்கள் வெளியாக இருக்கிறது. விஷாலின் மார்க் ஆண்டனி படத்தில் வில்லன் ரோலில் நடிக்கவும் அவர் கமிட் ஆகியிருக்கிறார். இது மட்டுமன்றி தெலுங்கில் ராம்சரண் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆக மொத்தத்தில் டாப் கியர் அப்படித்தானே..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்