மேலும் அறிய

Kottukkaali: பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் படம்: ‘கொட்டுக்காளி’யால் செம குஷியில் சிவகார்த்திகேயன்

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் படம் என்ற பெருமையை கொட்டுக்காளி பெற்றுள்ளது. 

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கூழாங்கல் புகழ் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கி சூரி நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக அரங்கில் ப்ரீமியர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் படம் என்ற பெருமையை கொட்டுக்காளி பெற்றுள்ளது. 

சர்வதேச அளவில் பாராட்டுக்களையும் உலகத்தளத்தில் புகழையும் ஒரு திரைப்படம் பெறப்போகிறது என்ற விஷயம் நமது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்குமே பெருமையான ஒன்று. அந்த வகையில், இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ், தான் இயக்கிய 'கொட்டுக்காளி' திரைப்படத்தை சர்வதேச பார்வையாளர்களிடம் கொண்டு செல்கிறார். பெர்லினில் அடுத்த பிப்ரவரி, 2024ல் நடைபெற இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட ‘கொட்டுக்காளி’ தேர்வாகியுள்ளது. இந்த சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வாகி இருக்கும் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை ‘கொட்டுக்காளி’ பெற்றுள்ளது.  சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து இருக்கும் படத்தை பி.எஸ். வினோத்ராஜ் இயக்கி உள்ளார். படத்தில் சூரி, அன்னா பென் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

தனது தயாரிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி படம் சர்வதேச விழாவில் தேர்வாகி இருப்பது குறித்து பேசிய சிவகார்த்திகேயன், ”நம்பிக்கைக்குரிய திறமைசாலிகளை ஊக்குவிக்கவும், அவர்களின் கனவுகளை நனவாக்கவும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் செயல்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக, என்னைச் சுற்றி தொழில் மீது ஆர்வம் கொண்ட திறமைசாலிகள் சரியாக அமைந்துள்ளனர். மொழி மற்றும் பிராந்திய தடைகளுக்கு அப்பால் அனைவரும் தொடர்புபடுத்தக்கூடிய மனித உணர்ச்சிகளை அங்கீகரிக்கும் தனித்துவமான கதைகளை உருவாக்க எங்கள் தயாரிப்பு நிறுவனம் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளது. இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் கொடுத்திருக்கும் ஒரு அற்புதமான படைப்பை நாங்கள் தயாரித்ததில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம். பெர்லின் சர்வதேச திரைப்பட விழா என்பது உலகத் திரையுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இடம். மேலும், வரவிருக்கும் ஆண்டுகளில் நாம் மறக்க முடியாத பெருமைமிகு நினைவாகவும் இது இருக்கும்” என்றார்.

’கொட்டுக்காளி’ படத்தில் இணைத் தயாரிப்பாளர் கலை அரசு மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்‌ஷன்ஸூடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மூலம் தயாரித்துள்ளது. படத்திற்கு பி.சக்தி வேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை கணேஷ் சிவா மேற்கொள்ள, சுரேன் ஜி & எஸ். அழகிய கூத்தன் இசையமைத்துள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Sivakarthikeyan Productions (@skprodoffl)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

T20 World Cup 2024 Prize Money: டி20 உலகக் கோப்பை சாம்பியன்.. கோடிகளை அள்ளிய இந்திய அணி! எவ்வளவு தெரியுமா?

17 ஆண்டு கால கனவை நினைவாக்கிய இந்தியா! பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

IND vs SA Final T20 2024: திருப்பம் தந்த சூர்யா.. 17 ஆண்டுகளுக்குப் பின்பு.. டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்திய இந்தியா

IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?

ABP Premium

வீடியோ

Dog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோT20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 World Cup 2024 Prize Money: டி20 உலகக் கோப்பை சாம்பியன்.. கோடிகளை அள்ளிய இந்திய அணி! எவ்வளவு தெரியுமா?
T20 World Cup 2024 Prize Money: டி20 உலகக் கோப்பை சாம்பியன்.. கோடிகளை அள்ளிய இந்திய அணி! எவ்வளவு தெரியுமா?
17 ஆண்டு கால கனவை நினைவாக்கிய இந்தியா! பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
17 ஆண்டு கால கனவை நினைவாக்கிய இந்தியா! பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
IND vs SA Final T20 2024: திருப்பம் தந்த சூர்யா.. 17 ஆண்டுகளுக்குப் பின்பு.. டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்திய இந்தியா
IND vs SA Final T20 2024: திருப்பம் தந்த சூர்யா.. 17 ஆண்டுகளுக்குப் பின்பு.. டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்திய இந்தியா
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?

IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!

Nayanthara: எந்த விழாவுக்கும் போகாத நான்.. “நேசிப்பாயா” பட விழாவில் நயன்தாரா விளக்கம்!

Indian 2: அனிருத் பற்றி ஷங்கரிடம் கேளுங்கள்.. நான் இளையராஜா, ரஹ்மான் ரசிகன்.. இந்தியன் 2 நிகழ்வில் கமல்ஹாசன்!

Embed widget