மேலும் அறிய

Sivakarthikeyan : எட்டு வயசுல சிவகார்த்திகேயன பாத்திருக்கேன்.. யார் சொன்னது தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை பற்றிய மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார் அவருடன் பணியாற்றிய ஒருவர்

மடோன் அஸ்வின் இயக்கி சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படமான மாவீரன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிவகார்த்திகேயனின் தந்தையுடன் பணியாற்றிய ஒருவர் பத்திரிகைக்கு அளித்த பேட்டி, தற்போது சமூக வலைதளத்தின் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயனின் தந்தையுடன் பணியாற்றிய அனுபவம், அவரது குணம் எப்படியானது என தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

சிவகார்த்திகேயனை நான் எட்டு வயதில் பார்த்திருக்கிறேன்..

எஸ் கே வின் தந்தையின் நண்பர்  அளித்த பேட்டியில் “ திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் பணியாற்றியபோது அவருடன்  நான் வேலை செய்திருக்கிறேன். அவரைப்போலவே எனத வித கெட்டப் பழக்கமும் இல்லாத காரணத்தினால்  என்னை அவருக்கு பிடித்திருந்தது. எந்த முக்கியமான வேலை என்றாலும் என்னிட அதை ஒப்படைப்பார். அவருடன் வேலை செய்த காலங்களில் நான் அவரது நேர்மையைக் கண்டு வியந்திருக்கிறேன். அவருடன் வீட்டிற்கு சென்றிருக்கிறேன். சிவகார்த்திகேயனை நான் அவர் எட்டு வயதாக இருக்கும்பொது பார்த்திருக்கிறேன் தற்போது ஒரு நடிகராக இவ்வளவு பெரிய உயரத்தில் அவரைப் பார்ப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்

சிவகார்த்திகேயன், ரஜினி

சிவகார்த்திகேயனின் தந்தை காவல் அதிகாரியாக இருந்த தகவல் நாம் அனைவரும் அறிந்ததே. தனது வாழ்நாள் முழுவதும்  ஒரு நேர்மையான காவல் அதிகாரியாக பணியாற்றி இருக்கிறார். தனக்கென சில நடைமுறைகளை அவர் தொடர்ந்து பின்பற்றியும் வந்திருக்கிறார். தனது வீட்டில் இருந்து சாப்பாடு, தண்ணீர் எல்லாம் தனது வீட்டில் இருந்தே கொண்டு சென்றுவிடுவாராம். மேலும் சிறையில் இருக்கும் கைதிகளின் நலனைப் பற்றி அதிக கவனம் எடுத்துக்கொள்பவர் அவர். சிறையில் இருந்த பல கைதிகளை படிக்க ஊக்குவித்து அவர்கள் பட்டப்படிப்பை முடிப்பதற்கு உதவி செய்திருக்கிறார். மேலும் அவரது சொந்த முயற்சியால் சிறையில் கைதிகளுக்காக ஒரு நூலகத்தை அமைத்திருக்கிறார். தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார்  இயக்கும் ஜெயிலர் திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் தந்தையின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவீரன்

மண்டேலா திரைப்படத்தை இயக்கி தேசிய விருது வென்ற இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியிருக்கும் திரைப்படம் மாவீரன். சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், யோகி பாபு, சரிதா, மிஸ்கின் ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். பரத் ஷங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மாவீரன் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் ஜூலை 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது மாவீரன்.

தலைப்பு செய்திகள்

பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்
'நமக்கு சோறு போட்ட படம் அது'... 'ஜன நாயகன்' லீக் குறித்து உருக்கமாக பேசிய பிரதீப் இ. ராகவ்
'நமக்கு சோறு போட்ட படம் அது'... 'ஜன நாயகன்' லீக் குறித்து உருக்கமாக பேசிய பிரதீப் இ. ராகவ்
சமஸ்கிருத ஸ்லோகத்தை காப்பியடித்தாரா? வைரல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அப்யங்கர்
சமஸ்கிருத ஸ்லோகத்தை காப்பியடித்தாரா? வைரல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அப்யங்கர்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Tata Harrier: டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? அப்படி என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்?
டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? ஹாரியரில் என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்
Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
Embed widget