மேலும் அறிய

நாலு படம் நடிச்சவன் தயாரிப்பாளரா..! சிவகார்த்திகேயனுக்கு குடைச்சல் கொடுத்த தயாரிப்பாளர்

நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியபோது மூத்த தயாரிப்பாளர் அவருக்கு தொந்தரவு கொடுத்ததாக ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்

அருண்ராஜா காமராஜா இயக்கிய கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார் நடிகர் சிவகார்த்திகேயன். இதனைத் தொடர்ந்து நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா , வாழ் , டாக்டர் , டான் என தொடர் வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார். தொலைக்காட்சி தொடரில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார். இதனிடையில் திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரிடம் இருந்து தனக்கு பிரச்சனை கொடுக்கப்படுவதாக சிவகார்த்திகேயன் பல மேடைகளில் தெரிவித்துள்ளார். தற்போது இது குறித்து ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். 

தொந்தரவு கொடுத்த தயாரிப்பாளர் 

சிவகார்த்திகேயன் ப்ரோடக்‌ஷன்ஸ் சார்பாக அடுத்தபடியாக தாய்க்கிழவி திரைப்படம் வெளியாக இருக்கிறது. சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் குறித்தான பேட்டி ஒன்றில் ராதிகாவிடம் சிவகார்த்திகேயன் பற்றிய ஒரு தகவலை ரங்கராஜ் பாண்டே பகிர்ந்துகொண்டார். " சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியபோது என்னிடம் மூத்த தயாரிப்பாளர் ஒருவர் பேசினார். இப்போதான் நான்கு படம் நடித்திருக்கிறார் அதற்குள் என்ன தயாரிப்பு நிறுவனம் தொடங்குவது என்று அவர் சொன்னார். அவர்கள் சிவகார்த்திகேயனுக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். " என்று ரங்கராஜ் பாண்டே தெரிவித்தார்.

ஞானவேல்ராஜாவா ?

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் ரங்கராஜ் பாண்டே குறிப்பிட்டது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை தான் என்று ரசிகர்கள் பலர் கூறி வருகிறார்கள். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்தார். இந்த படம் வசூல் ரீதியாக நஷ்டத்தை சந்தித்ததால் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் மற்றொரு படத்தில் நடிக்க இருப்பதாக பேச்சுவார்த்தை நடந்தது. மேலும் இப்படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு தரவிருந்த 15 கோடி சம்பளத்தில் பாக்கி இருந்ததால் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு எதிராக சிவகார்த்திகேயன் மெட்ராஸ் ஹை கோர்டில் மனுதாக்கல் செய்தார். 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget