Sivakarthikeyan : பிக்பாஸ் வீட்டிற்குள் சிவகார்த்திகேயன்...அமரன் படத்திற்கு வேற லெவல் ப்ரோமோஷன்
அமரன் படத்தின் ப்ரோமோஷனுக்காக பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்
பிக்பாஸ் தமிழ்
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது வார இறுதியை எட்டியுள்ளது. கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி துவங்கிய இந்த நிகழ்ச்சி இந்த வாரம் 25 ஆவது நாளை எட்ட இருக்கிறது. இதுவரை ரவிந்தர் , அர்னவ் உள்ளிட்டவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள். பிக்பாஸ் 25 ஆவது நாள் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். இந்த ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்துள்ளார். கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் 31 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. அமரன் படத்திற்கான ப்ரோமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ப்ரோமோஷனின் ஒரு பகுதியாக சிவகார்த்திகேயன் பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார்.
போட்டியாளர்களுக்கு எஸ் கே கொடுத்த அட்வைஸ்
#Day19 #Promo3 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 25, 2024
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/sYty7QIYom
" அமரன் உணர்ச்சிகளை பதிவு பண்ணும் ஒரு படம்தான். பிக் பாஸ் வீட்டிற்கும் அமரன் படத்திற்கு நிறைய சம்பந்தம் இருக்கிறது. இரண்டிலும் ஒற்றுமை ரொம்பவும் முக்கியம். " என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.