Amaran Release: விஜய் vs சிவகார்த்திகேயன்.. 'அமரன்' ரிலீஸ் தேதி குறித்து வெளியான தகவல்!
Amaran release date : சிவகார்த்திகேயனின் 'அமரன்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். 2கே கிட்ஸ்களின் ரோமியோவாக இருந்து வரும் சிவகார்த்திகேயனுக்கு குட்டிஸ் சுட்டிஸ் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் செல்ல பிள்ளை.
டாக்டர், டான் உள்ளிட்ட வெற்றிப்படங்களை தொடர்ந்து அவரின் நடிப்பில் வெளியான பிரின்ஸ் படம் ஒரு சரிவை கொடுத்தது. ஆனால் மாவீரன் படம் மூலம் மீண்டு எழுந்த சிவகார்த்திகேகேயனின் 'அயலான்' திரைப்படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது கமல்ஹாசனின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'.
மறைந்த ராணுவ வீரரான முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் தான் முடிவடைந்தது என்ற தகவல் சோசியல் மீடியாவில் வெளியானது. அதை தொடர்ந்து தற்போது 'அமரன்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாதம் 'அமரன்' படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே செப்டம்பர் 5ம் தேதி வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கோட்' படம் வெளியாக உள்ளது. அதே செப்டம்பர் மாதம் சிவகார்த்திகேயனின் 'அமரன்' படத்தையும் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதால் நேரடியாக விஜய்யுடன் மோத சிவகார்த்திகேயன் தயாராகி விட்டாரா என கேள்விகள் எழுந்துள்ளன.
முதலில் படக்குழு ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு எடுத்து இருந்தது. ஆனால் அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 2' படம் அன்றைய தினத்தில் வெளியாவதால் அமரன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்திவைத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் 'அமரன்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரையில் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'அமரன்' படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் மூலம் இயக்குநர் முருகதாஸ் ஒரு கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து அவர் நடிகர் சல்மான் கானை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். அதன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளர் ஏ.ஆர். முருகதாஸ். இப்படம் விரைவில் தொடங்க உள்ளதால் சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கும் படத்தை விரைவில் முடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.