மேலும் அறிய

Deepavali Release : சிவகார்த்திகேயனின் 'அமரன்' முதல் கவினின் 'பிளடி பெக்கர்' வரை... தீபாவளி சரவெடிக்கு ரெடியான படங்கள்...

Deepavali releases :தீபாவளி ஸ்பெஷல் ரிலீஸ் படங்களாக வெளியாக உள்ள படங்களின் பட்டியல் இதோ:

பண்டிகை கொண்டாட்டம் துவங்கியாச்சு என்றாலே எந்த அளவுக்கு புது துணி, பட்டாசு, இனிப்பு நிச்சயம் இடம்பெறுமோ அதே போல புது படங்களில் ரிலீஸும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்று. அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் திரைப்படமாக வெங்கட் பிரபு - விஜய் கூட்டணியில் 'தி கோட்' படம் வெளியாக உள்ளது என்றால் ஆயுத பூஜை கொண்டாட்டமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'வேட்டையன்', சூர்யாவின் 'கங்குவா' படங்கள் வெளியாக தயாராக உள்ளன. அடுத்தது என்ன தீபாவளி தானே. 

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு என்னென்ன படங்கள் வெளியாகும்? எந்தெந்த ஹீரோக்கள் களத்தில் மோத போகிறார்கள்? யாருடைய படம் கலெக்ஷனை அள்ளும் இப்படி பல கேள்விகளும் யூகங்களும் ஆண்டு துவங்கிய உடனே ஆரம்பித்து விடும். பொதுவாக பெரிய நடிகர்களின் படங்களை தீபாவளிக்கு எதிர்பார்க்கலாம். ஆனால் இந்த முறை தீபாவளிக்கு முன்னரே விஜய், ரஜினிகாந்த் படங்கள் வெளியாகி விடுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் படங்களை பற்றி பார்க்கலாம்.

Deepavali Release : சிவகார்த்திகேயனின் 'அமரன்' முதல் கவினின் 'பிளடி பெக்கர்' வரை... தீபாவளி சரவெடிக்கு ரெடியான படங்கள்...

அமரன் : 

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதுவரையில் சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே படம் வெளியாவதற்கு முன்னரே அதிக தொகைக்கு விற்பனையான முதல் படம் இதுவாகும். தீபாவளியை முன்னிட்டு இப்படம் அக்டோபர் 31ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

Deepavali Release : சிவகார்த்திகேயனின் 'அமரன்' முதல் கவினின் 'பிளடி பெக்கர்' வரை... தீபாவளி சரவெடிக்கு ரெடியான படங்கள்...

பிரதர் :

சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் போன்ற அல்டிமேட் படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிரதர்'. ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். அடுத்தடுத்து ராஜேஷ் இயக்கிய படங்கள் தோல்வி அடைந்ததால் இந்த படம் நிச்சயம் வெற்றி படமாக அமைந்து அவருக்கு கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் அக்டோபர் 31ம் தேதி வெளியாக உள்ளது. 

Deepavali Release : சிவகார்த்திகேயனின் 'அமரன்' முதல் கவினின் 'பிளடி பெக்கர்' வரை... தீபாவளி சரவெடிக்கு ரெடியான படங்கள்...

பிளடி பெக்கர்  :

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்து சூப்பராக பயணித்து வரும் நடிகர்களில் ஒருவரான கவின் லிஃப்ட், டாடா, ஸ்டார் படங்களை தொடர்ந்து தற்போது அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'பிளடி பெக்கர்'. இயக்குநர் நெல்சன் திலீப்குமாரிடம் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 31ம் தேதி வெளியாக உள்ளது. 

Deepavali Release : சிவகார்த்திகேயனின் 'அமரன்' முதல் கவினின் 'பிளடி பெக்கர்' வரை... தீபாவளி சரவெடிக்கு ரெடியான படங்கள்...

லக்கி பாஸ்கர் : 

'வாத்தி' படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி லீட் ரோலில் நடித்துள்ள திரைப்படம் 'லக்கி பாஸ்கர்'. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. செப்டம்பர் 27ம் தேதி வெளியாக இருந்த இப்படம் ஒரு சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அக்டோபர் 31ம் தேதி வெளியாக உள்ளது.    

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?

அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா

ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!

Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?

ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!

அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு

உங்களுக்கு போட்டியா எங்க அண்ணன் வரான்...ரீல்ஸ் போட்ட சிறுவர்கள்..அனிருத் கொடுத்த பதிலை பாருங்கள்

Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்

Embed widget