Sivaangi in Cook With Comali: இனிமே நான் கோமாளி இல்ல... புரமோஷன் வாங்கிய ஷிவாங்கி... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
குக் வித் கோமாளி 4வது சீசன் ஓரிரு நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், கோமாளியாக கலக்கிய ஷிவாங்கி குக்காக புரமோஷன் பெற்றுள்ள செய்தியை ட்விட்டர் மூலம் உறுதிசெய்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பாடகராக அறிமுகமானார் சிவாங்கி. இந்த நிகழ்ச்சியில் வசீகர குரலால் அவர் பாடிய பாடல்கள் இணையத்தில் வைரலானது. அதனை தொடர்ந்து அவர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார். இந்த நிகழ்ச்சியில் அவர் செய்த லூட்டிகள், சேட்டைகள் எல்லாம் மக்களுக்கு மிகவும் பிடித்துப் போக, இவருக்காகவே அந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் பார்க்க ஆரம்பித்தனர்.
பிஸியான பர்சனாலிட்டி :
இது வரையில் குக் வித் கோமாளி 3 சீசன்களிலும் கலக்கிய ஷிவாங்கி உலகளவில் பிரபலமானர். இதன் மூலம் ஏராளமான படவாய்ப்புகளையும் பெற்று பிஸியான ஒரு பர்சனாலிடியாக வலம் வருகிறார். சமீபத்தில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். நடிகையாக ஒருபக்கமும் பின்னணி பாடகியாக மறுபக்கமும் கலக்கும் ஷிவாங்கி அடுத்தாக குக் வித் கோமாளி 4 சீசனிலும் பங்கேற்க உள்ளார் ஆனால் அதில் ஒரு சின்ன ட்விஸ்ட் கொடுத்து அவரின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
பட்டையை கிளப்பிய காம்போ :
அஸ்வின் - ஷிவாங்கி லவ்ஸ் காம்போ மற்றும் புகழ் - ஷிவாங்கி பாசமலர் காம்போ செம்மையாக ஒர்க் அவுட் ஆனது. இவர்களின் லூட்டிகள் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஒரு ஹைலைட்டாக அமைந்தது. எந்த ஒரு சீசன் என்றாலும் குக்குகள், கோமாளிகள் மட்டுமின்றி நடுவர்களின் செல்லாகுட்டி ஷிவாங்கி தான். பல முறை அதிர்ஷ்டமான ஒரு கோமாளியாக பல குக்களுக்கு இம்யுனிட்டி டாஸ்க் மற்றும் மெயின் டாஸ்க்கில் எல்லாம் சிறப்பான முறையில் வெற்றியும் பெற்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த தரமான season-க்கு ரெடி ஆகுங்கள் 😃 #CookuWithComaliSeason4 ஜனவரி 28 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #CookuWithComali4 #CWC #VijayTelevision #VijayTV pic.twitter.com/CRz0XhpQpY
— Vijay Television (@vijaytelevision) January 23, 2023
வதந்திகள் உண்மையா?
குக் வித் கோமாளி 4வது சீசன் வரும் ஜனவரி 28ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் கல்யாண சமையல் சாதம் என ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த நான்காவது சீசனில் ஷிவாங்கி பங்கேற்க மாட்டார் என வதந்திகள் பரவியது. அதை தொடர்ந்து ஷிவாங்கி கோமாளியாக இல்லாமல் குக்காக புரமோஷன் பெற்றுவிட்டார் என கூறப்பட்டது. இப்படி ஏராளமான வதந்திகள் பரவி வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ட்விட்டரில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார் ஷிவாங்கி.
Yes..the rumours were true!🤭 Got promoted as a Cook after being a Comali for three years😛Need all your support and blessings in this new thrilling journey ...🙏 see you all in #cookwithcomali4 in a new form😊 pic.twitter.com/xarmnbQLMU
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) January 25, 2023
ஆம்! வெளியான வதந்திகள் உண்மை தான். கோமாளியாக மூன்று சீசன் இருந்த பிறகு தற்போது தான் குக்காக ப்ரமோட் ஆகியுள்ளதாகவும், த்ரில்லிங்கான புதிய பயணத்தில் அனைவரின் ஆதரவும் ஆசீர்வாதமும் தேவை என ஷிவாங்கி போஸ்ட் செய்துள்ளார். ஷிவாங்கியின் இந்த போஸ்டிற்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.