Actor Srideva: சினிமாவில் என்ட்ரியாகும் 'சிறகடிக்க ஆசை ' மனோஜ்... யாருக்கு ஜோடி தெரியுமா?
Actor Srideva : சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் பிரபலமான நடிகர் ஸ்ரீதேவா சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் என்ட்ரி கொடுத்து தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகர்களாக விளங்குபவர்கள் ஏராளம். அதிலும் குறிப்பாக விஜய் டிவி நடிகர்கள் பலரும் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களாக விளங்குகிறார்கள். அந்த பட்டியலில் இணைந்த ஒரு விஜய் டிவி பிரபலம் தான் நடிகர் ஸ்ரீதேவா.
ஒரு வீடியோ ஜாக்கியாக தன்னுடைய பயணத்தை துவங்கிய ஸ்ரீதேவா தற்போது விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியலானா 'சிறகடிக்க ஆசை' சீரியலில் அண்ணாமலை - விஜயா தம்பதிகளின் மூத்த மகன் மனோஜ் கேரக்டரில் நடித்து வருகிறார். டி.ஆர்.பி ரேட்டிங் வரிசையில் முன்னணி இடத்தில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம் அதில் நடிக்கும் நடிகர்களின் எதார்த்தமான நடிப்பு மற்றும் விறுவிறுப்பான கதைக்களம்.
சிறகடிக்க ஆசை மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள ஸ்ரீதேவா சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஏற்கனவே வெள்ளித்திரையில் தலைகாட்டியுள்ளார். 'துணிவு' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் முகம் காட்டிய ஸ்ரீதேவாவுக்கு தற்போது நடிகை திவ்யா துரைசாமியின் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை திவ்யா துரைசாமி. இவர்கள் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளனர் என்ற தகவலை தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்தார் நடிகர் ஸ்ரீதேவா. இந்த சந்தோஷமான செய்தி அறிந்த சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மனோஜுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
"இதுவரையில் ஐந்து ஆறு சீரியல்களில் நடிகர் ஸ்ரீதேவா நடித்துள்ளார். ஆனால் எந்த சீரியல் மூலமும் தனக்கு கிடைக்காத அங்கீகாரம் 'சிறகடிக்க ஆசை' சீரியல் மூலம் கிடைத்தது. திருச்சியில் லோக்கல் சேனல் ஒன்றில் ஆங்கராக இருந்த போது நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால் சென்னைக்கு கற்றுக்கொள்ள வந்தேன். எதுவும் சரியாக வராததால் மீண்டும் திருச்சிக்கே சென்று படிப்பையும், குடும்ப பிசினஸையும் கவனித்து வந்தேன். பிறகு கொஞ்ச காலத்திற்கு பிறகு நண்பர்களுடன் சேர்ந்து ஷார்ட் பிலிம்களில் நடித்து வந்தேன். அதன் மூலம் மீண்டும் சென்னைக்கு வந்து சிறந்த நடிகர் என சர்டிபிகேட் எல்லாம் கொடுத்தார்கள். அதை வைத்து கொண்டு வாய்ப்புக்காக ஒவ்வொரு இடமாக ஏறி இறங்கினேன். அப்படியே ஒவ்வொரு வாய்ப்பாக கிடைத்து தற்போது இந்த இடத்திற்கு வந்து நிற்கிறேன்" என பேசி இருந்தார் நடிகர் ஸ்ரீதேவா.