Sudha Ragunathan : அமெரிக்காவில் பாடகி சுதா ரகுநாதன் தினம் அறிவிப்பு.. கெளரவித்த நியூயார்க் மேயர்
அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில், ஜூன் 19-ஆம் தேதி பாடகி சுதா ரகுநாதன் தினம் அனுசரிக்கப்படுவதாக நியூயார்க் மேயர் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதனை கவுரவிக்கும் வகையில் ஜூன் 19 ஆம் தேதி சுதா ரகுநாதன் தினம் அனுசரிக்கப்படுவதாக நியூயார்க் மேயர் எரிக் ஆடம் அறிவித்துள்ளார்.
சுதா ரகுநாதன் தினம்:
சுதா ரகுநாதன் குறித்து கருத்து தெரிவித்த நியூயார்க் மேயர் எரிக் ஆடம், இசை திறமையால், கடல் கடந்து பல சாதனைகளை படைத்துள்ளார். இவருடைய அறக்கட்டளை வாயிலாக பல்வேறு தரப்பு மக்களும் பயனடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சுதா ரகுநாதனின் திறமையை அங்கீகரிக்கும் வகையிலும், அவரை பாராட்டும் வகையிலும் நியூயார்க்கில் ஜீன் 19ம் தேதி சுதா ரகுநாதன் தினம் அனுசரிக்கப்படும்.
உலக அரங்கில் கௌரவம்:
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் சுதா ரகுநாதன் தினம் கொண்டாடப்படுவதற்கான, பிரகடணத்தை நியூயார்க் மேயர் வெளியிட்டார். தமிழ்நாட்டு பாடகிக்கு கிடைத்திருக்க கூடிய இந்த அங்கீகாரம் , இந்தியர்களுக்கு, உலக அரங்கில் கௌரவத்தை ஏற்படுத்தியுள்ளது.
19 June has been proclaimed as ‘Sudha Ragunathan Day’ by
— Sudha Ragunathan (@RagunathanSudha) June 20, 2022
Honble Eric Adams, the Mayor of New York. And to share it with my Indian trail blazers is indeed a double delight-Indra Nooyi, former CEO, Pepsico and the fraternity of Sankara Nethralaya who received it for Social Service. pic.twitter.com/8w3RSHsRb0
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்