மேலும் அறிய

G V Prakash - Saindhavi: யாரோ இவன் யாரோ இவன்... திருமண நாள் வாழ்த்தை ஸ்வீட்டாக பகிர்ந்த சைந்தவி..

தங்களது 10-வது ஆண்டு திருமண நாளன்று தனது கணவர் ஜி.வி பிரகாஷ் குமாருக்கு அழகான வாழ்த்து ஒன்றை பதிவிட்டுள்ளார் அவரது மனைவியான பாடகர் சைந்தவி.

இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் சைந்தவி தம்பதியினர் இன்று தனது பத்தாவது ஆண்டு திருமண நாளை கொண்டாடுகிறார்கள். தனது வாழ்க்கைத் துணைக்கு பாடகர் சைந்தவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியுள்ள வாழ்த்துப்பதிவு அனைவரது மனதையும் கவர்ந்துள்ளது.

தனது கணவருக்கு எழுதிய வாழ்த்து

தனது பதிவில் பாடகர் சைந்தவி இப்படி கூறியுள்ளார் “ நமக்கு திருமணமாகி  10 ஆண்டுகள் கழிந்துவிட்டன ஆனால் திரும்பிப் பார்க்கையில் நேற்று போல் இருக்கிறது. என் வாழ்க்கைத் துணைக்கு 10-வது ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள். ஒரு நல்ல நண்பனாக , ஒரு பாசத்துக்குரிய கணவனாக, நமது மகளுக்கு ஒரு சிறந்த தந்தையாக இருப்பதற்காக நன்றி. ஒரு சிறந்த நபராக இருப்பதற்கு நன்றி. 10 ஆண்டுகளை  நாம் சேர்ந்து கடந்ததைப்போல் காலமெல்லாம் பயணிக்க வேண்டும்.” என்று தனது கணவருக்கு மிக அழகான வரிகளை எழுதியுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Saindhavi Prakash (@saindhavi_prakash)

ஸ்கூல் லவ்

ஜிவி மற்றும் சைந்தவி இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். பள்ளிக் காலத்திலேயே இருவரும் காதலித்து வந்தார்கள். கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். 2020-ஆம் ஆண்டு இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது. தங்களது மகளுக்கு அன்வி என்று பெயர் வைத்தனர். தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமில்லாமல் திரை வாழ்க்கையில் இருவரும் சேர்ந்து பணியாற்றி வருகிறார்கள். ஜிவி இசையமைத்த பல அழகான பாடல்களை தனது குரலின் மூலமாக மேலும் அழகாக்கியவர் சைந்தவி.

இணைந்து பாடிய பாடல்கள்

உதயம் என்.ஹெச் 4 படத்தில்  யாரோ இவன், மயக்கம் என்ன படத்தில்  பிறை தேடும், த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் என்னாச்சு ஏதாச்சு, தலைவா படத்தில் யார் இந்த சாலையோரம் ஆகியவை இருவரும் சேர்ந்து தங்களது குரலில் ரொமான்ஸ் செய்த பாடல்களாக அமைந்தன.

ஜிவி பிரகாஷ்

தற்போது ஜிவி பிரகாஷ் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கி தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்திற்கும் இசையமைத்திருக்கிறார் ஜிவி. மேலும் வாடிவாசல், மார்க் ஆண்டனி , ஜப்பான் ஆகிய முக்கியத் திரைப்படங்களிலும் இசையமைத்திருக்கிறார்.

தலைப்பு செய்திகள்

ரூ.4000 கோடி பட்ஜெட் சர்ச்சைக்கு யாஷ் கொடுத்த விளக்கம்!
ரூ.4000 கோடி பட்ஜெட் சர்ச்சைக்கு யாஷ் கொடுத்த விளக்கம்!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
Embed widget