Singer Lizzo: பிறப்புறுப்பில் வாழைப்பழம்.. நடன கலைஞர்களுக்கு பாலியல் தொல்லை.. பிரபல பாப் பாடகி லிசோ மீது புகார்...
அமெரிக்காவின் பிரபல பாடகி லிசோ மீது அவரது குழுவில் இருந்த மூன்று நடனக் கலைஞர்கள் பாலியல் துன்புறுத்தல் புகாரளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பிரபல பாடகி லிசோ மீது அவரது குழுவில் இருந்த மூன்று நடனக் கலைஞர்கள் பாலியல் துன்புறுத்தல் புகாரளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்டில் பிறந்த மெலிசா ஜெபர்சன் தொழில்ரீதியாக அனைவராலும் லிசோ என்று அழைக்கப்படுகிறார். ராப் பாடகி, பாடலாசிரியர், நடிகை மற்றும் இசைக்கலைஞர் என பன்முகம் கொண்ட லிசோ, கிராமி விருது வென்றதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்.அவரின் ஆல்பங்களான லிசோபாங்கர்ஸ், Big Grrrl Small World,Cuz I Love You, Special ஆகியவை மிகவும் பிரபலமானது. மேலும் "Batches & Cookies", "Faded", "Let 'Em Say", "Phone", "Water Me","Cuz I Love You","Special" உள்ளிட்ட இசை வீடியோக்களிலும் தோன்றியுள்ளார்.
இதனிடையே லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி உயர் நீதிமன்றத்தில் பாலியல் தொல்லை வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஒரு கிளப்பில் நிர்வாணமாக ஆட நடனக் கலைஞர்களுக்கு லிசோ அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் நடனக் கலைஞர்களில் ஒருவரை எடை அதிகரித்ததற்காகவும் விமர்சித்ததாக தெரிவித்துள்ளார். அரியானா டேவிஸ், கிரிஸ்டல் வில்லியம்ஸ் மற்றும் நோயல் ரோட்ரிக்ஸ் ஆகியோர் தான் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள். மேலும், லிசோ நடனக் கலைஞர்களை பாலியல் தொழிலாளர்களின் பிறப்புறுப்பில் இருந்து வாழைப்பழங்களை சாப்பிட வைத்ததும் தெரியவந்துள்ளது. அதேசமயம் ஆம்ஸ்டர்டாமுக்கு ஒரு கச்சேரிப் பயணத்தின் போது லிசோ அவர்களை ஒரு இரவு ஊருக்கு அழைத்துச் சென்றார். அது சிவப்பு விளக்கு பகுதியைப் போன்ற பகுதியாகும்.
மேலும் அந்த கிளப்பில் நிர்வாண கலைஞரின் மார்பகங்களை தொடுமாறு அரியானா டேவிஸை அழுத்தம் கொடுத்ததாகவும், மேலும் லிசோவின் நடனக் குழுவின் தலைவராக உள்ள ஷிர்லின் குய்க்லி, திருமணத்திற்கு முன் உடலுறவு கொண்டவர்களை இழிவுபடுத்தியதாகவும், அவர் தனது கிறிஸ்தவ நம்பிக்கைகளை மற்ற நடனக் கலைஞர்கள் மீது திணிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மோசமான பாலியல் கற்பனைகளைப் பகிர்ந்து கொள்கிறார் எனவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: இவ்வளவு அன்பை எதிர்பார்க்கல... ஃபஹத் தான் சூப்பர்... வசனமே பேசாமல் கவர்ந்த நடிகை ரவீனா நெகிழ்ச்சி!