”விசுவாசத்தை காட்டியிருக்கேன். காட்டுவேன். ஸ்டாலின் வந்துட்டாரு..” - பாடகர் அந்தோணிதாசன்..

திராவிட கட்சி மூலமா எங்களையும் மண்ணின் கலையும் அடையாளம் படுத்தியிருக்கோம். இப்போ, யாருக்கும் என்னை கேள்வி கேட்க உரிமையில்ல..

FOLLOW US: 

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவருடைய ஆன்லைன் தேர்தல் பிரசாரத்தை திமுகவின் ஐடி விங்க் பார்த்துக்கொள்ள, களத்தில் சுற்றிச்சுழன்று சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார் மு.க ஸ்டாலின். முக்கியமாக, தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்த நாளிலிருந்தே 'ஸ்டாலின் தான் வராரு' பாடல் மக்கள் மத்தியில் பெரிய ஹிட்டானது. மாற்றுக்கட்சியினரும் முணுமுணுத்த பாடலாக மாறிப்போனதுதான் இந்த பாடலின் ஸ்பெஷாலிட்டி.  இந்த பாடலை பாடிய பாடகர் அந்தோணிதாசனிடம் பேசினேன், 

''என்னோட நண்பர் மதன் கார்க்கி மூலமாதான் இந்த வாய்ப்பு வந்தது. முதல்ல என்னை கூப்பிட்டு, 'திமுக பிரச்சாரத்துக்காக பாடணும்னு' சொன்னார். எந்தவொரு அரசியல் பாட்டும் பாட கூடாதுன்னு முடிவுல இருந்தேன். ஏன்னா, ஒரு கலைஞன் ஜாதி, மதம், மொழி, அரசியல் போன்ற எதுலயும் முடங்கி போயிற கூடாதுனு இருந்தேன். ஏன்னா, ஒரு சுருக்கமான ஒரு வட்டத்துல இருக்க விரும்பல. ஆனா, என்னை கூப்பிட்ட மதன் கார்க்கி எனக்கு நல்ல வாய்ப்புகள் பல கொடுத்தவர். இதனால, வேண்டாம்னு சொல்ல எனக்கு விருப்பமில்ல” என்றார். 

”விசுவாசத்தை காட்டியிருக்கேன். காட்டுவேன். ஸ்டாலின் வந்துட்டாரு..” -  பாடகர் அந்தோணிதாசன்..

”இதையும் தாண்டி திராவிட முன்னேற்ற கழகம்தான் சென்னை சங்கமத்தின் வாயிலாக எங்களை போன்றவர்களை வெளியுலகத்துக்கு கொண்டு வந்துச்சு. நாட்டுப்புற கலைஞனா இருந்த என்னை மட்டுமில்ல நிறைய கலைஞர்களின் மொத்த வாழ்வாதாரமே சென்னை சங்கமத்தின் மூலம் தான் மேம் பட்டுச்சுனு சொல்லலாம். இந்த நன்றிக்கடனுகாகதான் 'ஸ்டாலின்தான் வராரு' பாட்டை பாடுனேன். ஆனா, இந்தப் பாட்டு இந்தளவுக்கு ஹிட்டாகும்னு எதிர்பார்க்கவே இல்ல. சினிமா பாட்டைவிடவும் ஹிட்டா கொண்டுபோய் சேர்த்திருச்சு. என்னோட நன்றியை மதன் கார்க்கி மற்றும் இசையமைப்பாளர் ஜெரால்டுக்கும்தான் சொல்ல விரும்புறேன். ரெண்டு மணி நேரத்துல பதிவுசெய்த பாட்டுதான் இது. 

தேர்தல் ரிசல்ட் வர்றதுக்கு முன்னாடி மு.க ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக பார்க்க போயிருந்தேன். அப்போ அங்கே இருந்த எல்லாருமே நான் பாடுன ஹிட் பாடல்களை சொல்லி சிங்கர் அந்தோணிதாசன்னு அறிமுகப்படுத்துனாங்க. உடனே, ”ஐயா, ஸ்டாலின்தான் வராரு” பாட்டை  நான்தான் பாடுனேன்னு சொன்னேன். ”நீங்கதான் பாடுனீங்களா, சூப்பர்”ன்னு சொல்லி வாழ்த்துகள் சொன்னார்.

இந்தப் பாட்டை நான் பாடுனதுகாக நிறைய பேர்கிட்ட இருந்து எதிர்ப்புகளும் வந்தது. நான் உண்மையை சொல்லி பாடுனேன். கஷ்டப்பட்டு நின்னப்போ எங்களுக்கு உதவி செய்யுறதுக்குனு யாருமே வரல. ஆனா, 2005 வருஷத்துக்கு அப்புறம் திராவிட கட்சி மூலமா எங்களையும் மண்ணின் கலைகலையும் அடையாளம் படுத்தியிருக்கோம். இப்போ, யாரும் என்னை கேள்வி கேட்க உரிமையில்ல. ஏன்னா, இது என்னுடைய தனிமனித சுதந்திரம் இல்லையா..? என்னோட விசுவாசத்தை இது மூலமா காட்டியிருக்கேன். இன்னும் விசுவாசமா இருப்பேன். 

”விசுவாசத்தை காட்டியிருக்கேன். காட்டுவேன். ஸ்டாலின் வந்துட்டாரு..” -  பாடகர் அந்தோணிதாசன்..

நாட்டுப்புற கலைஞர்கள் எல்லாருமே இப்போ இந்த லாக்டவுன் காலத்துல பெரிய வேதனையை சந்திச்சுட்டு வர்றாங்க. ”எப்படி உயிர் வாழ போறாங்கனே” தெரியல. நாட்டுப்புற சார்ந்த ஒரு சங்கத்துக்கு மாநில தலைவராகவும் இருக்கேன். சங்கத்தின் தலைவர்கள் எல்லாரும் போராடிட்டு எதிர்ப்புகளை தெரிவிச்சிட்டு இருந்தோம். இதுக்கு பிறகான காலத்துல நல்லது நடக்கும்னு நம்பிக்கையா இருக்கோம். உலகத்துல இருக்குற ஒட்டுமொத்த கலைஞர்கள் சேர்ந்து நலிவடைஞ்சு இருக்குறவங்களுக்கு உதவி பண்ணுனா நல்லாயிருக்கும். 

இந்த நேரத்துல நான் இசையமைச்சிருக்குற 'எம்.ஜி.ஆர் மகன்' படத்தோட ரிலீஸூம் தள்ளிப் போயிருச்சு. கடந்த வருஷமே ரிலீஸ் ஆகியிருக்கவேண்டியது. அப்போவும் கொரோனா லாக்டவுனால முடியல. என் வாழ்க்கையில அதிக வேதனையை அடைஞ்சது அப்போதான். இருந்தும், தயாரிப்பாளர்கள் மற்றும் படத்துக்காக உழைச்ச உழைப்பாளிகள் யாரும் நஷ்டம் அடையாத வகையில தள்ளிப்போனது ஓகேனு தோணுது” என்றார்.

Tags: dmk cm Mkstalin cinema election result stalin dan vararu song antony dassan

தொடர்புடைய செய்திகள்

இன்னொரு குவாரண்டைன் பாக்கப் போறோம் : பிக்பாஸ் சீசன் 5 எப்போ நடக்கும்?

இன்னொரு குவாரண்டைன் பாக்கப் போறோம் : பிக்பாஸ் சீசன் 5 எப்போ நடக்கும்?

இரவு நேரத்தை பொன்னாக்கும் ஹரிஷ் ராகவேந்திரா ப்ளேலிஸ்ட் !

இரவு நேரத்தை பொன்னாக்கும் ஹரிஷ் ராகவேந்திரா ப்ளேலிஸ்ட் !

Master Chef Telugu | நானும் ஆங்கர்தான் : விஜய்சேதுபதிக்கு போட்டியாக களமிறங்கும் தமன்னா..!

Master Chef Telugu | நானும் ஆங்கர்தான் : விஜய்சேதுபதிக்கு போட்டியாக களமிறங்கும் தமன்னா..!

KGF Chapter 2 : கேஜிஎஃப் 2 டப்பிங் பணிகளை தொடங்கிய நடிகை மாளவிகா அவினாஷ்!

KGF Chapter 2 : கேஜிஎஃப்  2 டப்பிங் பணிகளை தொடங்கிய நடிகை மாளவிகா அவினாஷ்!

RRR Update | ராஜமௌலியின் RRR ; விரைவில் துவங்கும் படப்பிடிப்பு.

RRR Update | ராஜமௌலியின் RRR ; விரைவில் துவங்கும் படப்பிடிப்பு.

டாப் நியூஸ்

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!