Singer Adnan Sami : 230 கிலோ டூ 130 கிலோ; எடைக்குறைப்பால் குழம்பி போன அதிகாரி.. வைரலாகும் பிரபல பாடகர்!
ஒரு புதிய வாழ்க்கை முறைக்கு நான் என்னை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறேனா? என்பது கேள்வியாகவே இருந்தது. அதிர்ஷ்டவசமாக, சிறு சிறு அடிகளை வைத்து அதை செய்து முடித்தேன்.
தமிழில் பாய்ஸ், ஆயுத எழுத்து, வீரம் போன்ற பல படங்களில் பாடல்கள் பாடிய பிரபல பாடகர் அத்னன் சாமி. ஒரு காலத்தில் 230 கிலோ எடை இருந்த இவர், கடுமையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்டவைகளை மேற்கொண்டு,தனது முந்தைய எடையில் இருந்து 130 கிலோ எடை வரை குறைத்துள்ளார். இந்தநிலையில் இவர் தனது எடைக்குறைப்பு பற்றியும், அப்போது நடந்த சுவாரசிய சம்பவம் பற்றியும் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.
View this post on Instagram
இது குறித்து அவர் பேசும் போது, “ ஒரு முறை நான் விமான நிலையத்திற்கு சென்றிருந்த போது, அங்கிருந்த அதிகாரி என்னுடைய பாஸ்போர்ட்டில் இருக்கும் என்னுடைய போட்டோவை பார்த்துவிட்டு, நான் வேறு யாரோ என்று நினைத்து விட்டார். அதன் பின்னர் கூகுளில் இருந்த எனது சமீபத்திய போட்டோவை காண்பித்து, எடைக்குறைப்பு குறித்து விவரித்து, பாஸ்போர்ட்டில் இருப்பது நான்தான் என்று விளக்க வேண்டியதாயிற்று.
நான் முன்பு எடை குறைப்பு பற்றி கவனம் செலுத்தவில்லை. ஒரு புதிய வாழ்க்கை முறைக்கு நான் என்னை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறேனா? என்பது கேள்வியாகவே இருந்தது. அதிர்ஷ்டவசமாக, சிறு சிறு அடிகளை வைத்து அதை செய்து முடித்தேன்.
அறுவைசிகிச்சை மூலம் தான் அதிக எடையைக் குறைத்ததாக பல வதந்திகள் பரவுகிறது. நான் லிபோசக்ஷன் ( கொழுப்பை குறைப்பதற்கான அறுவை சிகிச்சை) செய்துகொண்டதாக சொல்கிறார்கள். ஆனால் லிபோசக்ஷன் சற்றே குண்டாக இருப்பவர்களுக்கானது; 230 கிலோ எடையுள்ளவர்களுக்கு அல்ல. நான் எந்த எடை இழப்பு அறுவை சிகிச்சையும் செய்யவில்லை.
உணவை உட்கொள்வதை கட்டுப்படுத்தினேன். நான் என்ன சாப்பிடுகிறேன் என்பதில் மிகவும் கவனமாக இருந்தேன். சில சமயம், மக்கள் கேட்டால், ‘see- food diet’ என்று சிரித்துக்கொண்டே சொல்வேன். மேலும் தீவிரமாக நான் ஸ்குவாஷ் விளையாடுவேன்.
View this post on Instagram
தற்போது தனது குடும்பத்துடன் மாலத்தீவில் விடுமுறையில் இருக்கும் அவர், சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.