Watch Video | ரேஷ்மா - மதனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு.. அசந்துபோன புதுஜோடி..வைரலாகும் வீடியோ
சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமான ரேஷ்மா முரளிதரன் மற்றும் மதன் பாண்டியன் ஜோடிக்கு நடிகர் சிலம்பரசன் தனது வாழ்த்துகளை கூறியுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய ‘பூவே பூச்சூடவா’ தொடரில் ஜோடியாக நடித்ததின் மூலம் பிரபலமானவர்கள் ரேஷ்மா முரளிதரன் மற்றும் மதன் பாண்டியன். ரீலில் மட்டுமே இணைந்து நடித்த இவர்கள் தற்போது ரியல் லைப்பிலும் ஜோடியாக மாறியுள்ளனர். இவர்களுக்கு அண்மையில் திருமணம் நடந்து முடிந்தது. இந்த திருமண விழாவில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களுக்கு தங்களை வாழ்த்துகளை தெரிவித்தனர்.
View this post on Instagram
அவை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த நிலையில் இந்த ஜோடிக்கு நடிகர் சிலம்பரசனும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். வீடியோ கால் வழியாக தனது வாழ்த்துகளை கூறிய சிம்புக்கு ரேஷ்மா மற்றும் மதன் பாண்டியன் ஜோடி தனது நன்றியை தெரிவித்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ரேஷ்மா – மதன் ஜோடி ‘பூவே பூச்சூடவா’ தொடருக்கு பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘அபி டைலர்’ தொடரிலும் நடித்து வருகின்றனர். அண்மையில், கேரளாவைச் சேர்ந்த செம்பருத்தி தொடரில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ஷபானாவும், பாக்கியலட்சுமி தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யனும் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.