Watch Video: வந்துட்டான்டா வந்துட்டான்டா காளை.... சிம்புவின் புது லுக்... ஃபயர் விடும் நெட்டிசன்கள்!
எஸ்டிஆர் 48 படம் குறித்த அறிவிப்பு முன்னதாக வெளியாகி சிம்பு ரசிகர்களை மகிழ்வித்த நிலையில், தற்போது சிம்புவின் நியூ லுக் குறித்த இந்த வீடியோ வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் சிம்புவின் புதுலுக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சிம்புவின் அடுத்த படமான எஸ்டிஆர் 48 படம் குறித்த அறிவிப்பு முன்னதாக வெளியாகி சிம்பு ரசிகர்களை மகிழ்வித்த நிலையில், தற்போது சிம்புவின் நியூ லுக் குறித்த இந்த வீடியோ வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
பத்து தல பட ரிலீஸ், வெந்து தணிந்தது காடு அடுத்த பாகம், எஸ்டிஆர் 48 என சிம்பு படு பிசியாக இயங்கி வரும் நிலையில், முன்னதாக தாய்லாந்தில் இருந்து புது கெட் அப்பில் சென்னை திரும்பியுள்ளார்.
நாளை (மார்ச்.18) பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் நிலையில், சிம்புவின் இந்த புதிய லுக் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பத்து தல கெட் அப்பில் முழு நீள தாடியுடன் சிம்பு நீண்ட நாள்களாக வலம் வந்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது சிம்புவின் இந்தப் புதிய லுக் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் உருவாகவுள்ள 54ஆவது படமாக சிம்புவின் இந்தப் படம் உருவாகும் நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.
முன்னதாக நடிகர் ரஜினிகாந்திடம் தேசிங்கு பெரியசாமி இந்தக் கதையைக் கூறியதாகவும் ஆனால் ஒரு சில காரணங்களால் ரஜினிகாந்த் இதில் நடிக்க முடியாத நிலையில், சிம்பு தற்போது அதே கதையில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
மற்றொருபுறம் இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள பத்து தல படம் வரும் மார்ச் 30ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக உள்ளது.
முஃப்டி கன்னட ரீமேக்கான பத்து தல படத்தில் நடிகர்கள் கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன்,கலையரசன், நடிகை பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

